Homeஜோதிட தொடர்உங்கள் பிறவியின் ரகசியம்

உங்கள் பிறவியின் ரகசியம்

பிறவியின் ரகசியம்

ஒரு நபர் முற்பிறவியில் எந்த அளவுக்கு நற்காரியங்களை அல்லது தீய வினைகளை செய்துவந்தார் என்பதை இப்பிறப்பில் அவரின் ஜாதக அமைப்பு சுட்டிக் காட்டி விடும்.

ஜாதகர் ஆண் பகல் வேலையில் பிறந்தவர். அவரின் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி சூரியன் ஆகியவை ஒற்றைப்படை ராசி வீடுகளில் அமைந்தால் அவர் சகலவிதமான சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனலாம்

 குறிப்பு:ஒற்றைப்படை ராசி வீடுகள்- மேஷம்,மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்

ஜாதகர் பெண் இரவு வேளையில் பிறந்தவர். அவரின் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி சூரியன் ஆகியவை இரட்டைப்படை ராசி வீடுகளில் அமைந்தால் அவர் மகா பாக்கியம் பெற்ற புண்ணியவதியா திகழ்வார். இந்த யோக அமைப்புகள் சிலரிடம் மட்டுமே காணப்படும் என்பதும் உண்மை.

 குறிப்பு: இரட்டைப்படை ராசி வீடுகள்- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்,மீனம்

ஜாதகத்தில் மொத்தம் 12 வீடுகள் உள்ளன. அவற்றில் ஜென்ம லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 5 மற்றும் 9 -ம் வீடுகள் முக்கிய சுப வீடுகளாகும். இவற்றில் 5-ம் வீடு பூர்வ புண்ணியத்தையும், 9-ம் வீடு பாக்கியத்தையும் குறிக்கும். இந்த வீடுகளுக்கும் கிரகங்களுக்கும் ஆன தொடர்பை வைத்து பூர்வ புண்ணிய பலனை அளவிடலாம்.

 சுப கிரகங்கள்: குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன்

 அசுப கிரகங்கள்: சனி ,செவ்வாய், ராகு, கேது, சூரியன்

ஜாதகத்தில் 5 மற்றும் 9 ஆகிய சுப வீடுகளுக்கு எவ்வித கிரகங்களின் தொடர்பு இல்லாமல் அசுபக் கிரகங்களின் தொடர்பு(பார்வை,சேர்க்கை) மட்டுமே உள்ளது எனில் இப்படியான ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் இல்லை எனலாம்.

இப்படியான ஜாதக அமைப்பு கொண்ட நபர்கள் வினைப்பயனை புரிந்துகொண்டு நம் முன்னோர்களும், மகரிஷிகளும் வழிகாட்டியபடி வாழ்ந்து, தெய்வ வழிபாடுகளுடன் வாழ்வை தொடர்ந்தால் வரும் பிரச்சனைகளை பாதிப்புகளை எளிதில் சமாளித்துவிடலாம்.

பிறவியின் ரகசியம்

ஒருவரின் பிறந்த வேளை-லக்னம் மற்றும் ஜென்ம நட்சத்திரமானது திரிகோண வீடுகளான மேஷம், சிம்மம், தனுசு என்று அமையப் பெற்றால், அந்த ஜாதகர் பெரும்பாலும் தரும,தயாள சிந்தனை கொண்ட நபராக அமைவார்.

ஒருவரின் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி அர்த்த திரிகோண வீடுகளான ரிஷபம், கன்னி, மகரம் என்று அமைந்தால் அந்த ஜாதகர் பெரும்பாலும் பொன்-பொருள் ஈட்டுவதில் குறியாக இருப்பார்.

ஜென்ம லக்னம், ஜென்ம ராசியானது காம திரிகோண வீடுகளான மிதுனம், துலாம், கும்பம் என்று அமைந்தால் அந்த ஜாதகர் விருப்பங்கள்-அதீத ஆசைகள் மிகுந்தவராக இருப்பார்.

ஒருவரின் ஜென்ம லக்னம், ஜென்ம ராசியானது மோட்ச திரிகோண வீடுகளான கடகம், விருச்சிகம், மீனம் என்று அமைந்தால் எதிலும் பற்றில்லாமல் வாழ விரும்புவார்.

இவை பொதுவான விதிகளை இவற்றுடன் மிக நுட்பமாக ஜாதகத்தை ஆராய்ந்து பலன் அறிய வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!