Homeபரிகாரங்கள்எந்தெந்த விலங்குக்கு உணவளித்தால் எந்தெந்த தோஷம் நீங்கும் தெரியுமா?

எந்தெந்த விலங்குக்கு உணவளித்தால் எந்தெந்த தோஷம் நீங்கும் தெரியுமா?

எந்தெந்த விலங்குக்கு உணவளித்தால் எந்தெந்த தோஷம் நீங்கும் தெரியுமா?

நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுப்பதால் நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவளித்தால் கிரக பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.

சூரியன்

சூரிய பகவானின் கிரக பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் குதிரைக்கு உணவு அளிப்பதன் மூலம் அந்த பிரச்சினை தீரும்.

குரு

உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனை இருந்தால், திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

சந்திரன்

சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால் அதை சரி செய்ய நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.

செவ்வாய்

செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும் குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.

புதன்

உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச் சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன்திசை பிரச்சனையாக உள்ளவர்கள் கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லை எனில் தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

தோஷம் நீங்கும்

சுக்கிரன்

செல்வத்தை அளிக்கக் கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுபெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.

சனி

நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்புநிற விலங்குகள், பறவைகளுக்கு, உணவு அளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நாய், காகம் உள்ளிட்டவை.

ராகு-கேது

ராகு கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சக்கரை, மாவு பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!