Homeஜோதிட தொடர்கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு சந்திரன் பார்வை இணைவு தரும் பலன்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு சந்திரன் பார்வை இணைவு தரும் பலன்கள்

குரு சந்திரன் பார்வை

கன்னி லக்கினத்திற்கு குரு சுகாதிபதி, கேந்திராதிபதி, களத்திர ஸ்தான அதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி; சந்திரன் லாபாதிபதி,சுகாதிபதி

குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்மந்தம் பெறும் பொழுது அசையும்-அசையா சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

களஸ்திர ஸ்தானதிபதி குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாழ்க்கையை தருகிறது. எத்தனை திருமணம் நடந்தாலும் குரு சந்திர தசா புத்தி காலங்களில் திருமணத்தில், திருமண வாழ்வில் பாதகத்தையும், மாரகத்தையும் செய்ய தவறுவதில்லை.

மூத்த சகோதரர் மற்றும் சிற்றப்பாவுடன் கூட்டுத் தொழில் செய்தால் குடும்ப உறவுகளிடம் கடுமையான மன பேதகம் உண்டாகிறது.

பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் விசாரணையே செய்வது கிடையாது நேரடியாக எதிர்பாராத தண்டனையை கொடுத்து விடுவது தான் விபரீத விளைவு.

உபய லக்னம் என்பதால் பிரச்சனையின் தீவிரத்தை உணரும் முன்பே தண்டனை கிடைத்துவிடும். மேலும் என் அனுபவத்தில் பல கன்னி லக்கினத்தினர் குரு திசா காலங்களில் கனக புஷ்பராக கல்லை அணிந்து மாரகத்தை தேடிக் கொள்கிறார்கள்.

பரிகாரம் :

கன்னி லக்னத்தினர் புதன்கிழமை காலை 7 to 8 மணி வரையிலான சந்திர ஓரையில் மல்லிகைப்பூ அணிவித்து நவகிரகத்தில் உள்ள சந்திர பகவானை வழிபட ஏற்றம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!