Homeஅற்புத ஆலயங்கள்கல்வியில் சிறக்க வணங்க வேண்டிய பெருமாள்

கல்வியில் சிறக்க வணங்க வேண்டிய பெருமாள்

கல்வியில் சிறக்க வணங்க வேண்டிய பெருமாள்

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதார கணக்கில் வராதது ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் ஆகும்.படைக்கும் தொழிலுக்கே ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து பறித்து சென்ற மது, கைடபர் என்ற அசுரர்கள் அந்த வேதங்களை பாதாள உலகத்தில் மறைத்து வைத்தனர். இதனால் பிரம்மா செய்வதறியாது மயங்கினார்.

அப்பொழுது மனித உடலும் குதிரை தலையும் கொண்ட ஹயக்ரீவர் அவதாரம் எடுத்த பெருமாள் மது, கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் அளித்தார். பிரம்மாவும் தம்முடைய பிரமை நீங்கி மீண்டும் படைப்புத்தொழில் ஈடுபட தொடங்கினார்.

சரஸ்வதி தேவி கல்வி கடவுள் ஆவதற்கு அருள் புரிந்ததும் ஸ்ரீ ஹயக்ரீவர் என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.

பெருமாள்

இவ்வகையில் சிங்கப்பெருமாள் கோயிலின் அருகில் உள்ள செட்டிப்புண்ணியம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ யோக ஹயக்ரீவர் திருக்கோயில் கல்வி அறிவுக்கான சிறந்த பரிகாரத்தனமாக விளங்குகிறது.

இங்கு அட்சராப்பியாசம் செய்யும் குழந்தைகளுக்கு அமோகமான கல்வியறிவு கிடைக்கிறது. படிப்பில் மந்த நிலையில் உள்ள மாணவர்கள், ஸ்ரீ யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அதற்கு முதல் நாள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் கிடைப்பது உறுதி.

ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஸ்ரீ வாதிராஜர் போன்ற மகான்களால் வழிபடப்பட்ட வரும் மைசூர் ஸ்ரீபரலகால மடத்தின் பிரதான வழிபாட்டு கடவுளும் ஆகிய ஸ்ரீ ஹயக்ரீவரை,ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராகவும், ஸ்ரீ யோகஹயக்ரீவராகவும். பல்வேறு வைணவ திருக்கோயில்களில் தரிசனம் செய்யலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!