Homeஆன்மிக தகவல்குலதெய்வம்-கண்டுபிடிப்பது எப்படி

குலதெய்வம்-கண்டுபிடிப்பது எப்படி

குலதெய்வம்

முற்காலத்தில் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா?

நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது.

இந்த பிரச்சனை முற்காலத்திலும் சிலருக்கு இருந்ததுண்டு. அப்போது அவர்கள் தம் குலதெய்வத்தை கண்டறிய ஒரு எளிய வழியை வைத்திருந்தார்கள்.

அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

குலதெய்வத்தை அறியாதவர்கள் அக்காலத்தில் குலதெய்வத்தை நினைத்து ஒரு கை பிடி களிமண்ணை எடுத்து அதை பிள்ளையார் போல நன்கு பிடித்து பூஜை அறையில் ஒரு பலகையின் மேல் வைப்பார்கள்.

அக்காலத்தில் சந்தன பலகைகள் எளிதாக கிடைத்ததால் பெரும்பாலும் சந்தனப்பலகை மீதே வைப்பர்.

பின் அந்த களிமண் சிலையை தன் குலதெய்வமாக பாவித்து அதற்கு சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம் ஆகிவற்றை இடுவர்.

குல தெய்வம்
குல தெய்வம்

தங்களின் குலதெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா என்பதை அறியாததாலேயே அவர்கள் மஞ்சள், குங்குமம், விபூதி ஆகிய அனைத்தையும் இட்டனர். ஆண் தெய்வமாக இருந்தால் சந்தனமும் விபூதியும் ஏற்புடையதாக இருக்கும். பெண் தெய்வம் என்றால் சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிவை ஏற்புடையதாக இருக்கும்.

அதன் பிறகு தினம் தோறும் அந்த களிமண் சிலைக்கு சில புஸ்பங்களை மட்டும் சூட்டி வருவர்.

அதற்காக வேறு எந்த பிரத்யேக பூஜையும் கிடையாது. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் ஒரே ஒரு நொடிகூட அந்த களிமண் சிலையை வெறும் மண் தானே என்று நினைத்துவிடக் கூடாது.

குலதெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்

ஏன் என்றால் எப்போது அந்த களிமண் சிலையை குலதெய்வமாக பாவித்தார்களோ அப்போதே அந்த களிமண் சிலைக்குள் குல தெய்வம் புகுந்துவிடும் என்பது நம்பிக்கை.

களிமண் சிலைக்கான பூஜையை தொடர்ந்து செய்கையில் ஒரு கட்டத்தில் குல தெய்வத்தின் மனம் குளிர்ந்து, கனவிலோ அல்லது யார் மூலமாகவோ தான் யார் என்பதை பூஜை செய்தவர்களிடம் காட்டிக்கொள்ளும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!