சனி பகவானின் ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சனிக்கிழமையன்று கறுப்புக் கரை போட்ட சலவை செய்யாத புதிய வேட்டியை தானம் செய்வதால் நன்மை உண்டாகும்.
சனியால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய செருப்பை தைத்து அணிந்து கொள்ளக் கூடாது.புதிய செருப்பை தானும் அணிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புதிய செருப்பைத் தானமாக வழங்குவது நல்லது.
சனிக்கிழமையன்று எள் எண்ணெய்யை கடனாக வாங்கக் கூடாது.
இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் தன் முகத்தை பார்த்து அந்த எண்ணெய் சட்டியை தானம் கொடுத்துவிட வேண்டும்.தானம் கொடுத்த உடன் மங்கலப் பொருட்களைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்.
கருப்பு எள்ளினை புதுத்துணியில் பொதிந்து வெற்றிலைபாக்கு , காசுடன் தானம் கொடுப்பது நல்லது.
முழு கறுப்பு உளுந்தை கருப்புத் துணியில் கட்டி கறுப்பு நிறமுள்ள மனிதனிடம் தானம் கொடுப்பது நல்லது.உடைத்த உளுந்தை தானம் செய்யக் கூடாது.
கோதுமை தானியத்தை மஞ்சள் துணியால் கட்டி சனிக்கிழமை காலையில் தானம் கொடுக்க வேண்டும்.
சர்க்கரைப் பொங்கலை வாழை இலையில் வைத்து துணியில் பொதிந்து ஏற்ற தட்சணையுடன் தானம் கொடுக்க வேண்டும்.இந்தச் சர்க்கரைப் பொங்கலில் ஒரு சிட்டிகை எள்ளினை கலந்து கொள்வது கூடுதல் சிறப்பினைத் தரும் .