Homeஜோதிட குறிப்புகள்சிம்ம ராசியை பற்றிய சில குறிப்புகள்

சிம்ம ராசியை பற்றிய சில குறிப்புகள்

சிம்ம ராசி

💚தலைமை வகிக்கும் பண்பும் பிறரை வழிநடத்தும் பாங்கும் உள்ள உங்களுக்கு எப்போதுமே தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகவே இருக்கும்

💚திட்டமிட்டு திறம்பட செய்வதில் வல்லவரான நீங்கள் பேச்சிலும் செயலிலும் அதிகாரத்தை குறைத்துகிட்டு அன்பை கூட்டிகிட்டு உங்கள் உயர்வுகள் என்றும் உறுதியாக இருக்கும்.

💚தலைமை கிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள ராசியில் பிறந்த உங்களுக்கு எந்த விஷயத்திலும் முன் நிற்பது தான் பிடித்தமானதாக இருக்கும். அதோடு இரக்க குணமும் உள்ள நீங்கள் மற்றவர்கள் மனம் தளரும் நேரத்துல தோள் கொடுக்கவும் தயங்க மாட்டீர்கள். உயர்வான குணம் உள்ள நீங்கள் உறவுகளுடன் மனம் விட்டு பேச பழகிவிட்டால் உங்கள் உடலும், மனதும் தெளிவாகவும், தெம்பாகவும் இருக்கும்.

💚உங்கள் பெயரால் அமையக்கூடிய வீட்டின் தலைவாசல் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருப்பது நல்லது.

சிம்ம ராசி

💚படிப்பு, பணி,திருமணம் இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களுக்கு புறப்படும் போது துளசி செடி, பூச்செடி இப்படி ஏதாவது செடி கொடிகளுக்கு கொஞ்சம் நீர் ஊற்றிவிட்டு புறப்படுங்க. அல்லது ஏழை நோயாளிகளுக்கு ஏதாவது உதவிகள் செய்யுங்கள். உங்கள் செயல்கள் வெற்றி பெற இது நற்பலன்கள் தரும்.

💚தகதகற்க பொன்னிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமானது. ஆரஞ்சு,ஆரஞ்சு கலந்த மஞ்சள் இவையும் ஓகே தான். முக்கியமான சமயங்களில் இந்த நிறத்தில் உடைய அணிவது சிறப்பு. அல்லது இந்த நிறத்தில் ஒரு கர்சிப் வச்சிக்கிட்டாலும் போதும்.

💚எப்போதும் சூரியன், அனுமானை கும்பிடுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். முடிந்தால் அன்றைக்கு ஒருபோதாவது விரதம் இருங்கள். அனுமானின் அருள் உங்களுக்கு எப்பவும் மகிழ்ச்சி சேர்க்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!