கடகம்
மனோகரன் ஆகிய சந்திரனை ஆட்சி வீடாக கொண்ட கடக ராசி அன்பர்களே!!!
இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்யஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 10, மற்றும் 4ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சித்திரை 16 ஆம் தேதி முதல் ஆனி 28-ஆம் தேதி வரை அதிசாரகதியிலும் தை 3ம் தேதி முதல் வருடம் முடியும் வரை நேர்க்கதியிலும் உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார்.
ஆனி 28-ஆம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
- சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் உங்கள் ராசிக்கு அஷ்டம சனி நடந்தாலும், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இருக்கும்வரை அஷ்டம சனியின் தொல்லைகள் இருக்காது.
- மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலையை அடைவீர்கள்.
- படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- குரு பலம் இருப்பதால் திருமணம் முடிவாகும் ஆனால் உடனே திருமணத்தை நடத்திவிட வேண்டும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள்.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தில் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.
- உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
- வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும்.
- தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள்.
- தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தொழில்துறையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவீர்கள்.
- உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமும் தன் கீழ் பணிபுரியும் பணிபுரிபவர்கள் இடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.
பரிகாரம்
சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன்களை பெறுவீர்கள்