சென்னை கோலவிழி அம்மன்
வரலாறு :
சென்னை மாநகரில் மைலாப்பூரில் கோலவிழி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. சோழர்கள் காலத்தை சார்ந்தது. இங்கு அமைந்துள்ள கலைநயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் சிலை மிகவும் பழமையும் சிறப்பும் வாய்ந்தது. சென்னையின் காவல் தெய்வமாக , மக்களை காத்து நிற்கிறாள் .
சிறப்பு :
இக்கோவிலில் இருக்கும் அம்மனின் சன்னிதியில் உருவமாக இருக்கும் உக்ரரூபம் கொண்ட அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். மேலே இருக்கும் சாந்த ஸ்வரூபமான அம்மனுக்கு , எண்ணெய் மேல் பூச்சு மட்டுமே நடத்தப்படும். அறுபத்து மூவர் விழாவில் அனைத்து முனிவர்களும் சிவபெருமானுக்கு முன் தலைமை பெற்று உலாவில் முதலில் செல்வது கோலவிழி அம்மன் தான்.
1008 பால் குடங்களை ஏந்திச் செல்வது மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாகும். மயிலையில் இருக்கும் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு பூஜையும் , கோலவிழி அம்மனின் உத்தரவை பெற்ற பிறகே நடைபெறுகிறது.
பரிகாரம் :
செவ்வாய் , வெள்ளி , ஞாயிறு ஆகிய தினங்களில் இவ்வாலயம் சென்று , நெய்விளக்கு அல்லது எண்ணெய் விளக்கேற்றி வழிபட நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.
வழித்தடம் : சென்னை மாநகரத்தில் பல பகுதிகளிலிருந்தும் மாநகரப் பேருந்துகளும் , புற நகர் பகுதிகளிருந்து பேருந்துகளும் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றன.
கோவில் இருக்கும் இடம்