Home108 திவ்ய தேசம்ஜாதகத்தில் நாகதோஷம் மற்றும் காலசர்ப தோஷத்தால் அவதிபடுபவர்களுக்கு தீர்வு தரும் சக்தி மிக்க திவ்ய தேசம்-திருநாகப்பட்டினம்

ஜாதகத்தில் நாகதோஷம் மற்றும் காலசர்ப தோஷத்தால் அவதிபடுபவர்களுக்கு தீர்வு தரும் சக்தி மிக்க திவ்ய தேசம்-திருநாகப்பட்டினம்

திருநாகப்பட்டினம் திவ்ய தேசம்

நகரின் நடுவிலேயே பஸ் ஸ்டாண்டிற்கு வெகு அருகில் நடந்தே சென்று பெருமாளைத் தரிசிக்கும் கோயில்களில் நாகப்பட்டினத்திலுள்ள ஸௌந்தர்யராஜப் பெருமாள் கோயிலும் ஒன்று.மிகப் பழமையான கோயில் என்பது இதன் பெருமை. திருநாகப்பட்டினத்திற்கே பெருமை தரக்கூடிய இந்தக் கோயிலைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நிறைய கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மற்ற எல்லாவற்றையும் விட ஆதிசேஷன் இந்த தலத்தில் உள்ள ஸாரா புஷ்கரணியில் தவமிருந்து பெருமாளை நேரடியாகவே தரிசனம் செய்த ஸ்தலம்.

திருநாகப்பட்டினம்

✯கோயிலில் ஏழுநிலை இராஜகோபுரம் மூன்று பிராகாரங்கள் இருக்கின்றன.

✯மூலவர் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலம்.

✯உற்சவர் சௌந்தர்யராஜ பெருமாள் .

✯தாயார் ஸெந்தர்யவல்லி , கஜலஷ்மி .

✯தீர்த்தம் ஸாரா புஷ்கரணி

✯விமானம் சௌந்தர்ய விமானம்.

✯நீலமேகப்பெருமாள் கதையுடன் நின்று அருள்பாலிப்பது விசேஷம்.

முதலில் நாகன்பட்டிணம். பிறகு நாகப்பட்டினமாக மாறிற்று. ஆதிசேஷனை தனது சயனமாக பெருமாள் ஏற்றுக் கொண்ட சம்பவம் இங்குதான் நடந்தது. மிக அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை இங்குண்டு. ஒரு கை பிரஹ்லாதனின் தலையைத் தொட்டும் மற்ற கைகள் ஹிரண்யனை வதம் செய்கின்றவனவாக இருக்கிறது , அபயஹஸ்தம் காணலாம்.

திருநாகப்பட்டினம்

உத்தானபாதன் அரசனின் குமாரனான துருவன் பெருமாளை நினைத்து கடுமையாகத் தவம் செய்தான். துருவனின் தவத்தைக் கலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. ஆனால் துருவன் அசரவே இல்லை . இளம் பாலகன் ஒருவன் , இப்படியொரு கடுந்தவத்தை செய்ததைக் கண்டு மகிழ்வடைந்த எம்பெருமான் கருட வாகனத்தில் துருவனுக்கு காட்சி கொடுத்து ‘ உனக்கு என்ன வரம் வேண்டும் ‘ என்று கனிவுடன் கேட்டார். இறைவனின் பேரழகில் மயங்கிய துருவன் , தான் எதற்காக இத்தனை கடுந்தவம் செய்து கஷ்டப்பட்டேனோ அந்த மூலகாரணத்தை விட்டு விட்டு இவ்வளவு அழகாக இருக்கும் தாங்கள் இந்த தலத்தில் பேரழகோடு எப்பொழுதும் எனக்கு தரிசனம் தரவேண்டும் என்று கேட்டான். எம்பெருமானும் துருவனின் ஆசையை நிறைவேற்ற இந்த ஸ்தலத்தில் சௌந்தர்ய ரூபமாகவே காட்சி அளிக்கிறார்.

நாகப் பெருமானுக்கும், துருவனுக்கும் பெருமாள் நேரடியாக காட்சி தந்த ஸ்தலம் என்பது பெருமை. நாக கன்னிகையை மணக்க விரும்பிய சோழநாட்டு அரசனின் வேண்டுதலை சௌந்தர்யராஜப் பெருமாள் நிறைவேற்றி வைத்திருக்கிறார்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

திருநாகப்பட்டினம்

பரிகாரம்

ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள் நாகத்தினால் தீண்டப்பட்டு உயிர் இழந்த குடும்பத்தினர் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும் , திருமணமாகாமல் , வம்சவிருத்தி தோஷம் உள்ளவர்களும் , பிறக்கின்ற குழந்தைகள் அழகும் அறிவும் கொண்டு பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் , இந்த சௌந்தர்யராஜப் பெருமாள் ஸ்தலத்திற்கு வந்து கடுமையாகப் பிரார்த்தனை செய்து வழிபட்டால் அவர்களுக்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகும். நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் . அவர்கள் தெய்வ வடிவாகவும் பிறந்து முன்னோர்களது பாவத்தையும் கழித்து , குடும்பத்தை சௌபாக்கியமாக மாற்றுவார்கள் என்பது இந்த ஸ்தலத்திற்கே உரிய பெருமை.

கோவில் இருப்பிடம் :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!