Homeஅடிப்படை ஜோதிடம்திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள்

திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள்

திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள்

சூரியன் தன் சுய திரேக்காண சக்கரமான சிம்மத்தில் இருந்தால்

ஜாதகன் உஷ்ண நோய் உடையவன், அயல் தேசத்தில் வசிப்பவன், நொந்த மனம் உடையவன், ஜெயப் பிரதாபம் குறைந்தவன், எலும்பு பலம் நிறைந்தவன், ஆனால் சரீர பலம் குறைந்தவன்.

சூரியன் சந்திரன் வீடாகிய கடக திரேக்காணத்தில் இருந்தால்

ஜாதகனின் தந்தை தர்மவான்,பந்து ஜனங்களுடையவன், பாவமற்றவன், சங்கீத பிரியன், அளவுடன் பேசுபவன், அழகிய மனைவியை அடைபவன்.

சூரியன் செவ்வாய் வீடாகிய மேஷ, விருச்சக திரேக்காணத்தில் இருந்தால்

ஜாதகன் விரோதிகளுடையவன், ஜாதகனுக்கு உஷ்ண ரத்த நோய் உபாதை உண்டாகும். நீசர் சேர்க்கையும் உண்டாகும். சண்டை செய்யும் சுபாவம் உடையவன். சர்வ காலமும் புத்திர நாசமும், பொருள் நாசமும் உண்டாகும்.

திரேக்காண சக்கரத்தில் சூரியன் தரும் பலன்கள்
சூரியன் புதன் வீடாகிய மிதுன கன்னி திரேக்காணத்தில் இருந்தால்

ஜாதகன் தான தர்ம ஆசாரமுடையவன் ஆனால் விலைமாதர்களிடம் விருப்பமுள்ளவன். விசித்திரமாக பேசுபவன். தேவர்களிடமும் பிராமணர்களிடமும் பக்தி கொண்டவன். நிலையில்லாத மனதுடையவன்.

சூரியன் குருவின் சொந்த வீடாகிய தனுசு மீன திரேக்காணத்தில் இருந்தால்

ஜாதகம் வணக்கமுடையவன், திருப்தியுடையவன், விரும்பத்தக்க விருந்தினர்களைப் பெற்றவன். எல்லா நற்குணங்களும் நிறைந்த புத்திமான். வாக்கு சாதுரியம் உடையவன்.

சூரியன் சுக்கிரனின் சொந்த வீடாகிய ரிஷப துலா திரேக்காணத்தில் இருந்தால்

ஜாதகன் சுகமுடையவன், பெண்களுக்கு நாயகன், உண்மை பேசுபவன், நோயற்ற தேகம் உடையவன், தேவர் பெரியோர்களிடம் அன்பு கொண்டவன்.

சூரியன் சனியின் சொந்த வீடாகிய மகர கும்ப திரேக்காணத்தில் இருந்தால்

ஜாதகம் பாவம் செய்பவன், ரோகமுடையவன், நன்றி கெட்டவன், தனக்குத்தானே எதிரியாக இருப்பவன், புத்திரர், நண்பர், இவர்கள் விலாசத்தில் தவிப்பவன். நீச காரியங்களில் பற்றுடையவன். பந்துக்களால் கைவிடப்பட்டவன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!