Home108 திவ்ய தேசம்திவ்ய தேசம் -திருவண் புருஷோத்தம பெருமாள்- திருநாங்கூர்

திவ்ய தேசம் -திருவண் புருஷோத்தம பெருமாள்- திருநாங்கூர்

திருவண் புருஷோத்தம பெருமாள்
திருவண் புருஷோத்தமம் ( திருநாங்கூர் ) '

திருநாங்கூர் ‘ – என்பது சின்ன ஊராக இருந்தாலும் பகவானின் கடைக்கண் பார்வை மிக அதிகமாகப் பெற்ற ஊர் என்பதால் பெருமாள் கடாட்சம் பொருந்திய ஊர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த சின்னஞ்சிறிய ஊரில் ஒரே தெருவில் திருமணி மாடக் கோவில் , திரு அரிமேய விண்ணகரம் , திருத் தெற்றியம்பலம் , திருவண் புருஷோத்தமம் என்ற நான்கு கோயில்களும் அமைந்திருக்கின்றன. இவையனைத்தும் பெருமாளின் பெருமையையே பறைசாற்றுவதால் 108 திவ்ய தேசங்களுக்குள் தனி இடம் பெற்று சிறப்பாக மிளிர்கின்றன.

திருநாங்கூர் சீர்காழியிலிருந்து எட்டுகிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது . சிறிய கோவில் ஒரு பிராகாரம் சுற்று.

மூலவர் புருஷோத்தமன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். 
தாயார் புருஷோத்தம நாயகி 
தீர்த்தம்திருப்பாற்கடல் என்ற பெரிய திருக்குளம். 
விமானம் சஞ்சீவி. விக்ரகம் 
தலவிருட்சம் வேம்பு. 

💚திருமாலுக்கு புருஷோத்தமன் என்ற திருப்பெயர் ஏற்பட்ட முதல் ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.

💚தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடக்கும் கருடசேவை உலகளாவியப் புகழ்பெற்றது.

💚திருமங்கையாழ்வார் மட்டுமல்ல ஸ்ரீ மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம் என்ற பெருமையும் உண்டு.

இந்தக் கோயிலைப் பற்றி பராசவனப் புராணத்தில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய முனிவர் வியாக்கிரபாதர். இவர் , வெகுநாள் குழந்தையில்லாமல் இருந்தார் புருஷோத்தமனான திருமாலை தினமும் வேண்டிக் கொண்டிருந்தார். பெருமாளின் அருளால் இவருக்கு ‘ உபமன்யூ ‘ என்ற ஆண் குழந்தை பிறந்தது. தன் பெயரைச் சொல்லக்கூடிய அளவுக்கு வாரிசு பிறந்த சந்தோஷத்தால் பெருமாளின் திருவடியையே நினைத்து மனமுருக தியானம் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் வியாக்கியபாதர் பெருமாளை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தார் . அவரது துணைவி வேறு வேலையாக வெளியே சென்றபோது வீட்டில் தனியாக இருந்த ‘ உபமன்யூ ‘ பசி தாங்காமல் அழுதான். குழந்தையின் அழுகுரலைக் கேட்ட புருஷோத்தமன் நாயகியான இறைவி ‘ உபமன்யூ’வின் பசியைப் போக்க பாலமுது ஊட்டினாள். இந்த வியத்தகு சம்பவத்தை அறிந்த வியாக்கியபாதர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இன்னொரு சம்பவமும் உண்டு ‘ குமேதஸ் ‘ என்பவன் படிப்பறிவு எதுவும் இல்லாதவன். இதனால் ஊரார் அவனை கேலி செய்து மனம் நோக அடித்தனர் . இதனால் அவமானப் பட்ட ‘ குமேதஸ் ‘ இங்குள்ள பெருமாளிடம் வந்து கதறி அழுதான்.பக்தனின் கண்ணீரைப் போக்க பகவான் புருஷோத்தமன் முன்வந்தார் . பண்டிதனாக மாறினான். பெருமாளின் தெய்வக் கடாக்ஷத்தினால் ‘ குமேதஸ் ‘ பின்னால் மிகச்சிறந்த பண்டிதனாக வலம் வந்தான்.

பரிகாரம் : 

வறுமையினால் துடிப்பவர்களும் , கல்வி அறிவு இல்லாமல் கலங்கிக் கொண்டிருப்பவர்களும் குழந்தைகள் எதிர்கால வளர்ச்சி மிகச்சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இளம் வயதில் பெற்றோரை இழந்து , தகுந்த பாசமும் அரவணைப்புமில்லாமல் ஒவ்வொரு நாளும் தவிப்பவர்களுக்கும் திருநாங்கூர் புருஷோத்தமன் அடைக்கலம் தருவார். வாழ்வை மேம்படுத்திக் காட்டுவார். இந்தக் கோயிலுக்கு வந்து மனதார பிரார்த்தனை செய்பவர்களுக்கு எந்தக் குறையும் எதிர்காலத்தில் ஏற்படாது. ஏற்கனவே இருந்த குறையும் உடனடியாக விலகிவிடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!