Homeபரிகாரங்கள்பரிகாரம் : தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம் !!

பரிகாரம் : தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம் !!

தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம்

கடன் இல்லாத வாழ்க்கையை நாமும் வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன செய்வது, அக்கடன் வாங்க கூடாது என்று நினைத்தால் கூட தவிர்க்க முடியாத சில பண தேவைகளுக்காக கடன் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கிய பிறகு அதனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம். மேலும் சில வீடுகளில் கடன் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் என்பதே இருக்காது. எனவே கடனை தீர்க்கக் கூடிய பல பரிகாரங்கள் ஆன்மிகத்தில் உள்ளது. அவற்றில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வரவேண்டும். ஏனென்றால் கலிகாலத்தில் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான். இவரை நாம் வழிபடும்போது நம் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடன் பிரச்சனையை தீர்க்கும் முருகப்பெருமானை வழிபடக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றினை பற்றி பார்க்கலாம். இப்ப பரிகாரம் செய்ய தேவையான முக்கியமான பொருள் “செவ்வரளி பூ”

இந்த பூவினை வாங்கி உங்கள் கையால் மாலையாக கட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானின் படத்திற்கு போட்டு வழிபட வேண்டும். கழுத்தை நெரிக்கும் கடனும் எளிதில் காணாமல் போய்விடும். இந்த பரிகாரத்தை செய்தால் அதாவது பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானின் உருவப்படத்திற்கு செவ்வரளி மாலை போட்டு மண் அகல் விளக்கில் நெய்திபம் ஏற்றி உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை அனைத்தும் எளிதில் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை செய்து வர வேண்டும். முக்கியமாக காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ள மற்றவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து இருபத்தி ஏழு செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் உங்கள் கடன் பிரச்சனை குறைந்து வருவதை நீங்களே பார்க்கலாம். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!