Homeஜோதிட தொடர்புதன் சனி பரிவர்த்தனை

புதன் சனி பரிவர்த்தனை

புதன் சனி பரிவர்த்தனை

புதன் இல்லங்களில் சனியும் , சனி இல்லங்களில் புதனும் இருக்கும் கிரக நிலை பரிவவர்த்தனையில் பிறந்தவர்கள் கைவினை பொருள்கள் செய்வதில் திறமை மிகுந்தவர்களாக உள்ளனர். சிற்ப வேலை , கட்டிட வேலை , நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள தொழில் தொடர்புகள் இவர்களுக்கு கை வந்த கலையாகும். சினிமா நாடக துறை இவர்களை சிறப்பிக்க செய்கிறது. இவர்கள் சாஸ்திரங் களில் நிபுணர்கள்.வேதங்களை அறிந்தவர்கள். வாழ்க்கையில் எதையும் துச்சமென மதித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள் , மண் பாண்டங்களில் உலோகங்களில் மரம் , தந்தம் போன்றவைகளில் சிறப்பான கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைகளை செய்வதில் சிறந்தவர்களாக உள்ளனர் .

இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோபிப்பதில்லை.வம்சா வழி பாதிப்புகள் மறைமுக விரோதங்களால் ஏற்படும் பாதிப்பு இவர்களை விரைவில் அணுகுகிறது.இவர்களில் பலர் விளையாட்டு வீரர்களாய் உள்ளனர். கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் உயர்ந்தவர்களாகவரும், மருத்துவத் துறையில் சிறந்தவர்களாகவும், போட்டி பந்தயங்களில் ஈடு,படுபவராகவும் உள்ளனர்.

இவர்களிடம் ஏதோ ஒரு கெட்ட பழக்கம் குடி கொண்டு விடும். இதனால் இவர்களின் சிறப்பு மேலோங்காமல் மங்கி போகும் நிலை ஏற்படுகிறது. கால் நடை விவசாயம் இவர்களுக்கு உகந்ததாக செயல்படுகிறது.

அரசாங்கத்திற்கு விரோதமான செயல்களில் பிறரின் தூண்டு தலின் பெயரில் ஈடுபடும் நிலை ஏற்படுவதால் பிறரிடம் பார்த்து பழக வேண்டும். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்கக்கூடாது.

ரிஷப லக்னத்திற்கு 2 , 9 , 5 , 10 மிதுனத்திற்கு 1 , 9 , 4 , 9 கன்னிக்கு 5 , 10 , 1 , 5 துலாத்திற்கு 4 , 9 , 5 , 9 மகரத் திற்கு 1 , 9 கும்பத்திற்கு 1 , 5 போன்ற பரிவர்த்தனங்கஙள் சிறப்பான பலன்களை தருகிறது. மற்ற லக்னங்களுக்கு சிறப்பான பலன்களை தருவதில்லை.புதனோ சனியோ ஐரவதாம்சம்,குபேராம்சம் பெற்று இருந்தால் சிறப்போ சிறப்பு!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!