Homeசக்தி தரும் மந்திரங்கள்பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.

ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஐங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம

இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் , குங்குமம் , தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.

திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது.

கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ , அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும்.அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும் கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.

நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸூர்யாய நம : இதம் அர்க்யம் :

இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும் . இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும் .

இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும் அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு மணம் கைகூடும் .

துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம்
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!