Homeஜோதிட தொடர்பைரவர்-எந்தெந்த நாளில்-எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு

பைரவர்-எந்தெந்த நாளில்-எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு

பைரவர் வழிபாடு

சிவனின் அம்சமான கால பைரவரை , எந்தெந்த நாளில் , எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.

பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்னாகர் , சன பைரவர் , யோக பைரவர் , ஆதி பைரவர் , கால பைரவர் , உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றார்.

பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் உள்ளது. அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார் என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.

பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள் , அதற்குரிய கிழமைகளில் , வழிபட்டால் , சிறந்த பலனை அடையலாம்.

ஞாயிற்றுக்கிழமை

சிம்ம ராசியினர் ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதால் , தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி ஆண் , பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை , ருத்ராட்ச அபிஷேகம் , வடை மாலை சாற்றி வழிபட்டால் , திருமண தடை நீங்கி விரைவில் நடைபெறும்.

திங்கட்கிழமை

கடகராசியினர் திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து , சந்தன காப்பிட்டு , புனுகு பூசி , நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் , கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

செவ்வாய்க்கிழமை

மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.

பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு
புதன்கிழமை

மிதுனம் , கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

வியாழக்கிழமை

தனுசு , மீன ராசியினர் பைரவரை வியாழக் கிழமைகளில் வழி படுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வியாழக்கிழமையில் விளக் கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.

வெள்ளிக் கிழமை

ரிஷபம் , துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வஇலையாலும் , வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

சனிக்கிழமை

மகரம் , கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டம சனி , ஏழரை சனி , அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத் தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி , நல்லவை வந்து சேரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!