மாணிக்கம்
பசுமையான வாழ்வையும் கற்பனை வளத்தையும் தரும் இக்கல்லை அணிவதால் வீண் மன பயம் ஒழியும் பேய் பிசாசுகள் பயம், பிணத்தைக் கண்டால் உண்டாகும் பயம் முதலியன நீங்கும். மனவளர்ச்சி குன்றியவர்கள் இதை அணிவதால் நோயின் தீவிரம் குறையும் கரும்பு, வாழை, தென்னை விவசாயம் செய்பவர்கள், காவல்துறையினர்கள் இக்கல்லை அணிவதால் செழிப்புறுவர்.
காவல்துறையினர்கள் இதை அணிவதால் தைரியம் பெருகும் அதனால் பெரும்பதவி கிட்டும். இக்கல் குழப்பத்தை அடியோடு நீக்கும் பால், பேப்பர்,முத்து, உப்பு, பருத்தி, அரிசி, ஜிப்ஸம், முட்டை போன்ற வெண்மை நிறப் பொருள் கொள்முதல் செய்பவர்கள் இதை அணியலாம்.
மிதுன இராசியில் புதன் அமையப் பெற்றவர்கள் இக்கல்லை அணியலாம்.
மீனத்தில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் புதன். நீச்சமாவதால் இதை அணியக் கூடாது.
தனுசு இராசிக்காரர்கள் அணியக் கூடாது.
குறுக்கெழுத்தாளர்கள் இதை அணிந்திடின் வெற்றியான காரியதரிசிகளாய் விளங்குவார்.
பத்திரிக்கை ஆசிரியர்கள், நிருபர்கள். துப்பறிவாளர்கள். பத்திரிக்கையாளர்கள் இதை அணிவதால் நலமுறுவர். பெரும் வெற்றியாளர்களாவர்.
இக்கல் காதுவலி நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இராசியில் புதன் நீச்சமாகி, அமசத்தில் புதன் உச்சமான ஜதகத்தினர் இந்தக்கல்லை அணியலாம்.