Homeஜோதிட குறிப்புகள்மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு-சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு-சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு-சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

மேஷ லக்னத்தாருக்கு சந்திரன் சுகஸ்தான அதிபதி; குரு பாக்யாதிபதி மற்றும் விரையாதிபதி; குரு சந்திரன் சம்மந்தம் ஜாதகத்தில் எந்த விதத்தில் இருந்தாலும் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கௌரவத்துடன் வாழ்வார்கள்.

இவர்களுடைய முன்னோர்கள் `மாடு கட்டி போரடித்தால் மாளாது” என்று யானை கட்டி போரடித்த பண்ணையாளர்களாக இருப்பார்கள். தாய் வழி,தந்தை வழி பூர்வீக சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைபடுதலாக இருக்கும்.

கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும்-தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தாய்-தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள்.

குரு-சந்திரன் இணைவு

உற்றார்-உறவினர்கள் ஆதரவு அனுசரணை உண்டு. இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வதால் இவர்களுடைய சொத்துக்கள் தந்தையால் அல்லது குடும்ப உறவுகளால் பராமரிக்கப்படுகின்றன.

குருதசை வராதவரை மேஷ லக்னத்தினர் பாக்கியவான்கள். பாக்யாதிபதி குரு விரையாதிபதியாக சுகாதிபதியுடன் சம்பந்தம் பெறுவதால் குரு தசையில் பிற்பகுதியில் தந்தைக்காக அல்லது தந்தையால் சொத்துக்களை இழக்க நேரும்.

பரிகாரம்

முறையான பித்ருக்கள் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!