ரங்காபுர அருள்மிகு ஸ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயில்
இத்தலம் தெலுங்கானா மாநிலத்தில் மகபூப்நகர் மாவட்டத்தில் ஸ்ரீரங்காபூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இத்திருத்தலம் பெப்பர் 10 கி.மீ. வானாபார்தி 25 கி.மீ. கொல்லாபூர் 25 கி.மீ. ஹைதராபாத் 160 கி.மீ. கர்நூல் 63 கி.மீ. நந்தியால் 140 கி.மீ. மற்றும் மகபூப்நகர் 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கட்வால் எனும் ரயில்வே நிலையத்திலிருந்து 40 கி.மீ. தூரம் பேரூந்து தனியார் வாகன வசதி உள்ளது.
மகாநந்தி தரிசனம் காண வருவோர் இக்கோயிலை தரிசனம் காணலாம்.
18ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.
கிருஷ்ணதேவராயர் கனவில் ஸ்ரீமஹாவிஷ்ணு கழுகு காண்பிக்கும் இடத்தில் சிலை கிடைக்கும் அதனை பிரதிஷ்டைசெய்து கோயில் கட்டுமாறு பணித்தார். அதன்படியே கோதகோடா கன்வையபள்ளி மலைகளுக்கு இடையில் உள்ள ரத்னா புஷ்கரிணி எனும் ஏரியில் இக்கோயில் நிர்மாணிக்ககப்பபட்டது.
விஜயநகர சாம்ராஜ்ய கட்டிடக் கலை சிற்பக் கலை கோயில் முழுவதும் காணலாம். கோயில் அமைந்துள்ள இடம் மிகவும் அருமையாக இயற்கை சூழ்நிலையில் இருக்கிறது.
இத்திருத்தலத்தில் கோடை உற்சவமாக சங்ராந்தி ஒரு முழு மாதமும் கொண்டாடப்படுகிறது. ரதோற்சவம் மார்ச் மாதம் 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிரவண மாதத்தில் பக்தர்கள் அதிக அளவு தரிசனம் காண வருகிறார்கள்.
தரிசன நேரம்: 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
ஸ்ரீநாராயண ஹ்ருதயம்!
நாராயணம் பரம் தாம த்யாதா நாராயண பர
நாராயண பரோ தர்மோ நாராயண நமோஸ்துதே!
நாராயணனே சிறந்த ஸ்தானமாகத் திகழ்பவன், த்யானம்
பண்ணுகிறவனும் பரம் பொருளான அந்த நாராயணனே,
நாராயணனே ஞானத்தை அளிக்கும் தர்மவான் ஓ நாராயணா
தங்களுக்கு நமஸ்காரம்
ஓம் நமோ நாராயணாய
ஓம் ஸ்ரீரங்கநாயகசுவாமி நமோ நமோ
Google Map :