உங்கள் மனைவிக்குத் தொல்லைகள் , கவுடங்கள் ஏதேனும் இருந்தால் வெள்ளியினாலான செங்கற்கல் போன்ற அமைப்பை வீட்டில் வைத்திருங்கள்.
தேங்காய் அல்லது பாதாம் பருப்பை சனிக்கிழமையன்று ஓடும் நீரில் அல்லது நதியில் விடுங்கள்.
உங்கள் திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து தூய வெள்ளிக் கட்டிகளை வாங்கி , உங்கள் மனைவியிடம் கொடுத்து வாழ்நாள் முழுவ தும் பத்திரமாக வைத்திருங்கள்.
கங்கை நீருள்ள செம்பை வைத்திருங்கள். அதில் தண்ணீர் வற்றி விட்டால் மீண்டும் கங்கை நீரூற்றி சீல் வைத்து பத்திரமாக பூஜையறையில் வையுங்கள்.
உங்களுக்கு 21 வயதுக்குமுன் திருமணம் நடந்திருந்தால் , வெள்ளி செம்பு நிறைய கங்கை நீர் நிரப்பி , அதனுள் வெள்ளி சதுரத் தகட்டை வைக்கவும். இதேபோன்று இன்னும் ஒரு செம்பையும் தயாரித்து தங்கள் மனைவி கையில் கொடுத்து , இரண்டையும் பத்திரமாகப் பூஜயறையில் வைக்கவும்.
வீட்டில் நாய்களை வளர்க்காதீர்கள் நீலநிற ஆடைகளை அணியாதீர்கள்.
திருமணத்தின்போது மாமனாரிடமிருந்து வரதட்சணையாக எலக்ட்ரிகல் சாதனங்கள் நீலநிற ஆடைகள் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
முள்ளங்கிகளை தானமாகக் கொடுங்கள்.
நிலக்கரியை நீரோடு விடுங்கள்.
சூரிய உதயத்திற்குப்பிறகு பறவைகளுக்கு தானியங்களை உணவாகக் கொடுங்கள்.
உங்கள் வீட்டிலோ , வராண்டாவிலோ புகையை உருவாக்காதீர்கள் .