Homeஅடிப்படை ஜோதிடம்ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் பலன்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் பலன்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் பலன்கள்

  • க்னத்தில் சனி பகவான் தன் நண்பர் சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தந்தையால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். இல்வாழ்க்கையில் சில பிரச்சனைகள் உண்டாகும். உடற்பயிற்சி விஷயத்தில் புகழ் கிடைக்கும். ஜாதகர் சுயமாக நிறைய சம்பாதிப்பார்.
  • 2-ம் பாவத்தில் சனி தன் நண்பர் புதனின் வீட்டில் இருந்தால் நல்ல பணவசதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஜாதகர் புகழுடன் வாழ்வார். உடல்நலத்தில் சிறிய பிரச்சனைகள் இருக்கும். எப்போதும் பணம் குறித்த சிந்தனையே அதிகமாக இருக்கும்.
  • 3-ம் பாவத்தில் சனி இருந்தால் உடன்பிறப்புகளுடன் சரியான உறவு இருக்காது. ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு சாப்பிடுவார்.கடுமையாக உழைப்பார். திறமையாக வியாபாரத்தை செய்வார். புகழ் கிடைப்பதற்காக கடுமையாக உழைப்பார்.
  • 4-ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்கு தாயாருடன் கருத்து வேறுபாடு இருக்கும். பகைவரான சூரியனின் வீட்டில் சனி இருப்பதால் பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சனைகள் தோன்றும். இல்வாழ்க்கையில் சில தடைகள் ஏற்படும்.அரசாங்க விஷயத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் சுமாரான லாபத்துடன் நடக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். தாய்மாமன் உடன் உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஜாதகர் தைரியத்துடன் வாழ்வார்.
 சனி பகவான் தரும் பலன்கள்
சனி பகவான் தரும் பலன்கள்
  • 5-ம் பாவத்தில் தன் நண்பர் புதனின் ராசியில் சனி இருந்தால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். படிப்பால் பயனிருக்கும். அனைவரிடமும் நன்கு பேசி பழகி, ஜாதகர் புகழ் பெறுவார். தந்தைக்கு நல்ல மகனாக இருப்பார். மனைவியின் உடல் நலத்தில் சில பிரச்சினைகள் தென்படும்.
  • 6-ம் பாவத்தில் சனி உச்சமடைகிறார். அதனால் வர்த்தகத்தில் புகழ், வெற்றி கிடைக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். எனினும் தந்தையுடன் இணைந்து வெற்றிகளை காண்பார். ஜாதகர் வெளியே பார்ப்பதற்கு உன்னத மனிதரை போல தெரிவார். ஆனால் மிகுந்த சுயநலவாதியாக இருப்பார். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார்.
  • 7-ம் பாவத்தில் சனி பகவான் செவ்வாயின் வீட்டில் இருந்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பூமி,வீடு வாங்குவதில் பிரச்சனைகள் ஏற்படும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். எனினும் ஜாதகர் சந்தோஷமாக இருப்பார்.
  • 8-ம் பாவத்தில் சனி இருந்தால் ஆயுள் விஷயத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். வீடு வாங்குவதில் தடைகள் ஏற்படும். தர்ம செயல்களை செய்ய முடியாத நிலை உண்டாகும். புகழ் பெறுவதில் சிறிய தடைகள் இருக்கும். புகழ் பெற ஜாதகர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தன் முழு பலத்தையும் பணம் சம்பாதிக்க பயன்படுத்துவார். குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளைகளால் புகழ் கிடைக்கும்.
  • 9-ம் பாவத்தில் தனி சுய வீட்டில் இருந்தால் தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். ஜாதகருக்கு தந்தையின் ஆசீர்வாதம் கிட்டும். புகழுடன் வாழ்வார். சில நேரங்களில் நினைத்திராத இடத்திலிருந்து லாபம் வந்து சேரும். வாழ்க்கை முழுவதும் ஜாதகர் நற்பெயரையும் புகழையும் பெறுவதற்கு கடுமையாக உழைப்பார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
 சனி பகவான் தரும் பலன்கள்
சனி பகவான் தரும் பலன்கள்
  • 10-ம் பாவத்தில் கேந்திரத்தில் சனி பகவான் சுய வீட்டில் இருந்தால் தந்தையால் மகிழ்ச்சி கிடைக்கும். புகழ் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தர்ம செயல்களில் ஆர்வம் இருக்கும். சனி 12 ஆம் பாவத்தை பார்ப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். 4-ம் பாவத்தை பார்ப்பதால் பூமி, வீடு வாங்குவதில் இன்னல்கள் ஏற்படும். அன்னையின் உடல் நலத்தில் பிரச்சனை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பலரது பாராட்டைப் பெறுவார்.
  • 11-ம் பாவத்தில் சனி பகவான் தன் பகைவரான குருவின் வீட்டில் இருந்தால் லாபத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும். அனைத்தையும் கடந்து லாபம் கிடைக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகளால் புகழ் கிடைக்கும். அன்றாட பணிகளில் சிறிய தடைகள் உண்டாகும்.
  • 12-ம் பாவத்தில் சனி பகவான் மேஷ ராசியில் நீசம் அடைவதால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளி தொடர்புகளால் ஆதாயம் கிட்டும். ஆனால் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். தடைகள் உண்டாகும். பகைவர்களால் பிரச்சனைகள் உண்டாகும். ஆனால் அந்த பிரச்சனைகளால் தான் லாபமே கிடைக்கும். புகழ் கிட்டுவதில் சிறிய தடைகள் ஏற்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!