Homeஜோதிட தொடர்லக்ன தொடர்பில் மாந்தி ஏற்படுத்தும் பலன்கள்

லக்ன தொடர்பில் மாந்தி ஏற்படுத்தும் பலன்கள்

மாந்தி

மாந்தி பாபக்கிரஹங்களுடன் இருந்தால், ராஜாங்கத் தண்டனை கிடைக்கும் அல்லது அரசால் மரணம் ஏற்படும்.

‘மாந்தி’ லக்னத்தில் இருந்து சந்திரனும் செவ்வாயும் லக்னத்திலேயே சேர்ந்து இருந்தால், 4,7, 10 மற்றும் 8-ஆம் இடம் சுபர் சேர்க்கை இல்லாவிடில் வயது 36 ஆகும்.

லக்னாதிபதியும் குளிகனும், லக்னத்திலிருந்தாலும், மற்ற பாவங்களில் இருந்தாலும் ஆயுள் தோஷம், (ஜாதக அலங்காரம்.)

கன்னி லக்னமாகி ‘மாந்தி’ லக்னத்தில் இருக்க, எட்டாம் பாவத்தில் குரு நிற்கில் 3 வருடத்தில் குழந்தை மரிக்கும்.

இதுபோல் மேஷம் லக்னமாகி அதில் ‘மாந்தி’ இருக்க எட்டாம் பாவமான விருச்சிகத்தில் குரு இருப்பினும் 3 வருடத்தில் குழந்தை மரிக்கும்.

குளிகனும் ராகுவும் ஜென்மாதிபதியுடன் கூடி, ஜென்மாதிபதி ஜென்மத்திலிருந்தாலும், குளிகன் திரிகோணத்திலும், எட்டாமிடத்தில் இருந்தாலும், ஒரு பக்கத்து விதை அண்டம் போல் பெருக்கும். (ஜாதக அலங்காரம் தமிழ் 908)

குளிகனும் செவ்வாய் இருவரும், நான்காம் வீட்டோடுடன் கூடி இருந்தாலும், ஒரு பக்கத்து விதை அண்டம் போல் பெருக்கும்.

குளிகன் அங்காரகன் கூடி, ஜென்மத்தில் இருக்க சூரியன் பார்த்தால் சத்தியத்தின் பொருட்டு சபையோர் மத்தியில் சுக நெய்யிற் கையிடுபவன் (6,7,8 ஜாதக அலங்காரம் – தமிழ்)

“காணவே லக்னத்தில் காரியும் குளிகன் கூடி
நாணவே அதிலிருக்க அலது ஈறு எட்டு ஏற தோணவே புவியில் தானும் துவங்கிடப் பிறந்தபாலன்”

பூணவே மரணமாவான் புகழுடன் கணிதம் சற்றே லக்கினத்தில் சனியும், குளிகனும் கூடியிருக்க அல்லது 12,6,8ல் சனி இருக்கப் பிறந்தவுடன் மரணம் (ஜோதிட ரஸ்வம் என்னும் ஆயுள் கணிதம் செய்யுள் 214)

மேற் கூறியவாறு ஜாதகத்தில் அமைய சந்திரன் பலமற்று இருந்தால், அரச தண்டனையால் மரணம் (ஜாதகலங்காரம்)

ஆகவே ஆரு தேளும், அறிய எட்டிட மேயாக பாகமாய் அதனில் பொன்னும் பதிந்திடலக்னத்தில்
தாகமாய் குளிகள் வாழ தானென உதித்த பாலன்
மாகமாம் வருடம் மூன்றில் மரணமும் ஆவான்பிள்ளே

மேஷ ராசியும், விருச்சிக ராசியும், லெக்னத்திற்கு 8ஆம் ராசியாக இருக்க அதில் குரு நிற்க இலக்னத்தில் குளிகன் இருக்கப் பிறந்த பாலன் மூன்று வருடத்தில் மரணமாகுவான். (ஜோதிட ரகஸ்யம் என்னும் ஆயுள் கணிதம் 30)

கன்னி லக்னத்தில் ஒருவர் பிறந்திருந்தால் 8-ம் இடம் மேஷராசியாகிறது. லக்னத்தில் குளிகன் இருந்து மேஷத்தில் குரு இருந்தாலும். இதுபோல் மேஷ லக்னத்தில் குளிகன் இருந்து, விருச்சிகத்தில் குரு இருந்தாலும், மூன்று வருடத்தில் மரணம் அடைவான்.

‘மாந்தி’ கேத்திர ஸ்தானத்தில் இருந்து, ராகு 6ம் இடத்தில் இருந்தால், லக்னாதிபதி 12ஆம் இடத்தில் இருந்தால் 26 வயதில் ஷய ரோகம் உண்டாகும்.
(ஜாதக தெசாரிஷ்ட நிவாரணி பக்கம்-2)

லக்னத்தில் ‘மாந்தி’யும் லக்னேசன் நீசராசியாவும் இருந்தால் 56 வயதில் புத்திர சோகம் உள்ளவன் ஆவான்.(பராசர ஸம்ஹிதை)

சந்திரனும் மாந்தியும் லக்னத்தில் இருந்து, லக்னத்தில் பாபக்கிரஹத்துடன் கூடி இருந்தால் ரோஹியாவான்.

ராகு ‘மாந்தி’ செவ்வாய் இவர்களுடன் சேர்ந்தாலும் விரை வீக்கம் உண்டாகும் (சர்வார்த்த சிந்தாமணி)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!