Homeஜோதிட தொடர்விபத்துகளை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்

விபத்துகளை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்

விபத்துகளை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்

இன்றைய நாளில் தினமும் ஏராளமானவர்கள் விபத்தில் சிக்கி காயம் படுகிகின்றனர், மரணமடைகின்றனர். அவர்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் என்பதை அறிந்து கொள்ள விபத்தில் மரணம் அடைந்தவர்களின் ஜாதகத்தை சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில் ஆய்வு செய்தபோது அவர்களின் பிறப்பு ராசி கட்டத்தில் பல ஒற்றுமைகளை அறியமுடிந்தது அதனை சுருக்கமாக இங்கு காண்போம்.

  • ஒருவரின் ஜாதகத்தில் குரு, செவ்வாய்,ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று 1,5,9-ஆவது ராசிகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • ஒருவரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் 1,5,9-ஆவது ராசிகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு விபத்து, மரணமடையும் வாய்ப்பும் உண்டு.
  • ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 12-வது ராசியில் செவ்வாயும், 2-வது ராசியில் ராகுவும் என அடுத்தடுத்து இந்த 3 கிரகங்களும் இருந்தால் ஜாதகருக்கு விபத்து, மரணம் ஏற்படக் கூடும்.
  • குருவும் ,செவ்வாயும் ஒரே ராசியில் இருந்து அதற்கு 2-வது ராசியில் ராகு இருந்தால் விபத்துக்களை சந்திக்க நேரும்.
  • சனியும் ,செவ்வாயும் ஒரே ராசியில் இருந்து அதற்கு இரண்டாவது ராசியில் ராகு இருந்தால் ஜாதகருக்கு விபத்தும் அதில் மரணமும் ஏற்படலாம்.
  • ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 12-வது ராசியில் செவ்வாயும், 2-வது ராசியில் ராகுவும் அடுத்தடுத்து இருந்தால் ஜாதகருக்கு விபத்து உண்டாகலாம்.
  • சனி இருக்கும் ராசிக்கு 1,5,9-வது ராசிகளில் சனி ,செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் இருந்தால் ஜாதகருக்கு விபத்துக்கள் நேரிடலாம்.
  • குரு இருக்கும் ராசிக்கு ஐந்தாவது ராசியில் செவ்வாயும் ,செவ்வாய் இருக்கும் ராசிக்கு 2-வது ராசியில் ராகுவும் இருந்தால் விபத்து உண்டாகலாம்.
விபத்துகளை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்
  • குரு இருக்கும் ராசிக்கு 9-வது ராசியில் செவ்வாயும், ராகுவும் இருந்தாலும் விபத்து ஏற்படலாம்.
  • சனி இருக்கும் ராசிக்கு ஐந்தாவது ராசியில் செவ்வாயும், அந்த செவ்வாய்க்கு 2-வது ராசியில் ராகுவும் இருந்தால் விபத்துக்கள் ஏற்படலாம்.
  • ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று 1,5,9-வது ராசிகளில் இருந்தால் அவளது சகோதரனுக்கு அல்லது கணவனுக்கு விபத்து உண்டாகலாம்.
  • ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு ஐந்தில் செவ்வாயும், அந்த செவ்வாய்க்கு 2-ல் ராகுவும் இருந்தால் அவள் கணவனுக்கு விபத்து உண்டாகலாம்.
  • பெண்ணின் ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 12-வது ராசியில் செவ்வாயும், 2-வது ராசியில் ராகுவும் அடுத்தடுத்து 3 ராசிகளில் இருந்தால் அவள் கணவனுக்கு விபத்துக்கள் ஏற்படலாம்.
  • குரு இருக்கும் ராசியில் இருந்து 5,9-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்து அந்த செவ்வாய்க்கு 2-வது ராசியில் ராகு இருந்தால் அவள் கணவனுக்கு விபத்து ஏற்படலாம்.
  • பெண்ணின் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 1,5,9-ஆவது ராசிகளில் (குரு) செவ்வாய், ராகு இருந்தால் கணவனுக்கு விபத்து உண்டாகலாம்.
  • பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் 1,5,9-வது ராசிகளில் அல்லது 1,2,12 ராசிகளில் இருந்தால் அந்தப் பெண்ணின் சகோதரன், கணவன், மூத்தமகன் ஆகியோருக்கு விபத்துக்கள் உண்டாகலாம்.
  • ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், ராகு 1,5,9-ஆவது ராசியில் இணைந்திருந்தால் அவன் மனைவிக்கு நெருப்பினால் விபத்து உண்டாகலாம்.
  • ஒருவர் ஜாதகத்தில் சனி, சூரியன், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் 1,5 9-வது நெருப்பு ராசிகளில் இருந்தால் தீயினால் விபத்து, மரணம் உண்டாகலாம்.
  • ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், ராகு ஒரே ராசியிலோ அல்லது 1,5,9-ஆவது ராசிகளிலோ அல்லது அடுத்தடுத்த ராசிகளிலோ இருந்தால் ஜாதகரின் மனைவிக்கு நீரில் கண்டம் ஏற்படும்.
  • குரு, சந்திரன், ராகு ஆகியவை ஒன்றுக்கொன்று 1,5,9 ஆவது ராசி களிலோ அல்லது 2,6,10-வது ராசிகளிலோ அல்லது அடுத்தடுத்த ராசிகளில் இருந்தால் ஜாதகருக்கு நீரில் விபத்து கண்டம் ஏற்படும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!