உத்தியோகத்தில் உயர்வு தொழிலில் மேன்மை
🟢உத்தியோகம் -தொழில் யோகம் வருமான வாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான காலம் இது. தற்காலத்தில் படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் தற்போதைய சூழலில் பெருந்தொற்றின் பாதிப்பால் புதிய வேலையைத் தேட வேண்டிய சூழ்நிலையிலும் ,நலிவடைந்த போன தங்களின் வியாபாரத்தை மீண்டும் நிமிர்த்த வேண்டிய நிலையிலும் பலரும் உள்ளனர்.
🟢உத்தியோகத்தில் உயர்வு, நல்ல வேலைவாய்ப்பு, வியாபாரத்தில் லாபம் இவை நல்லபடியாக அமைய வேண்டுமெனில் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் பலம்பெற்றுதிகழ வேண்டும்.
🟢ஜாதகத்தில் பத்தாம் இடமே தொழில் ஸ்தானம். அந்த இடத்திற்கு அதிபதியான கிரகம் அந்த ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலை அமைவதில் முக்கிய பங்காற்றும். இதுபற்றி விரிவாக காண்போம்.
🟢ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் 10-ஆம் இடம் தொழில் அல்லது தொழில் ஸ்தானம் அதன் அதன் அதிபதியை ஜீவனாதிபதி என்கின்றன ஜோதிட நூல்கள். இந்த கிரகத்தின் நிலையைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் எந்த மாதிரியான தொழில் அல்லது உத்தியோகம் அமையும் என்பதை கணிக்கலாம்.
🟢நாடி கிரந்தங்கள் கூறும் விளக்கம் ஒன்று உண்டு . அதன்படி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் அதிபதி கிரகம் நிற்கும் நட்சத்திரத்தையும்(சாரம் ) கவனத்தில் கொள்ளவேண்டும். ஆக ஜீவன ஸ்தான அதிபதி கிரகம் அந்த கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் அதிபதி கிரகம் ஆகியவற்றின் தன்மையே ஒருவர் ஜீவனத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
🟢உதாரண விளக்கத்தைப் பார்த்தால் இன்னும் எளிமையாக புரியும் ஜாதகர் ஒருவரின் லக்னம் விருச்சிகம், அவரது ஜாதகத்தில் பத்தாம் இடம் சிம்மம் இதுவேதொழில் ஸ்தானம் சிம்மத்தின் அதிபதி சூரியன் இவர் இந்த ஜாதகத்தில் நிற்கும் இடம் சுப வீடான கடகம் (லக்னத்தில் இருந்து ஒன்பதாம் வீடு )புனர்பூசம் அதிபதி குரு, இந்த ஜாதக படி ,லக்கனத்துக்கு குரு யோகக்காரர் ,இந்த ஜாதகர் தான் சார்ந்திருக்கும் துறையில் உயர் பதவியில் சிறப்புற்று திகழ்வார். ஆக இந்த ஜாதகத்தில் பத்தாம் இடத்து அதிபதி கிரகமும்(சூரியன் ) அவர் நிற்கும் நட்சத்திர அதிபதி கிரகம்(குரு ) நல்ல நிலையில் இருப்பதால் நல்ல வேலை வாய்ப்பும் அதில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது பலன் விளக்கம்.
அந்த வகையில் ஜாதகத்தில் ஜீவன நட்சத்திர அதிபதிகளாக என்னென்ன கிரகங்கள் அமைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இனி பார்ப்போம்
சூரியன் தரும் தொழில்கள்
- அரசாங்கம் தொடர்பான வேலை,
- மருத்துவம்,
- தந்தை வழியில் தொழில் நடத்துதல்,
- பொன், வெள்ளி ,ரத்தினக் கற்கள் விற்பனை,
- அதிகாரம்- அந்தஸ்து உள்ள தலைமை பொறுப்பு வாய்க்கும்
சந்திரன் தரும் தொழில்கள்
- கற்பனை வளம் கொண்ட எழுத்தாளர்,
- கதாசிரியர், கவிஞர் என ஜாதகர் திகழ்வார்,
- மருத்துவப் பொருள்கள்,
- விவசாயம் ,
- தாய்வழி தொழில் நடத்தும் யோகம் ஆகியவை அமைய வாய்ப்பு உண்டு.
செவ்வாய் தரும் தொழில்கள்
- வீரதீர செயல்களில் ஈடுபடக்கூடிய வேலை ராணுவம் -காவல்துறை, விமானி,
- கணினி துறை, பொறியியல், ரியல் எஸ்டேட், அறுவை சிகிச்சை ஆகியவை சார்ந்த தொழிலோ வேலையோ அமையும்.
புதன் தரும் தொழில்கள்
- ஆசிரியர் பணி ,
- விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்,
- வான சாஸ்திர நிபுணர், ஜோதிடர், சிற்பம், ஓவியக்கலை,
- புத்தக வியாபாரம், செய்தி ஒளிபரப்புத்துறை ஆகியவை சார்ந்த பணி அல்லது வேலை அமையும்.
குரு தரும் தொழில்கள்
- அதிகாரம் வாய்ந்த வேலை அமையும் ,
- வங்கி, தபால் துறை ,நீதித்துறை ,மதத் தலைவர் அல்லது போதகர் பண்டிதர் ஆகிய பணிகள் அமையலாம் இவை சார்ந்த தொழிலில் மேன்மை தரும்.
சுக்கிரன் தரும் தொழில்கள்
- கலைத்துறையில் உயர்வு கிடைக்கும்,
- சினிமா, டிவி, நாடகம் ,ஓவியம், சங்கீதம்,
- வாகன பணிகள் ,வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருள்கள்,
- உணவுப் பொருள்கள் சார்ந்த தொழில் அமையும் இந்த துறைகளில் பணி அமைந்தால் முன்னேற்றம் காணலாம்
சனி தரும் தொழில்கள்
- கடின உழைப்பைத் தரும் கட்டடம் ,அல்லது சுரங்கம் சார்ந்த பணி அமையும்
- கட்டட மேஸ்திரி, நில ஆராய்ச்சி ,என்னை, இரும்பு வியாபாரம், விவசாயப் பணிகளையும், ஜீவனத்தை தீர்மானிக்கும் கிரகமாக சனி அமைந்த ஜாதகர்கள் தத்துவ மேதையாக விளங்கும் வாய்ப்பும் உண்டு/
ராகு தரும் தொழில்கள்
- ஜீவனத்தை தீர்மானிக்கும் கிரகமான ராகு அமையப் பெற்றால் சகலவிதமான தொழில்களிலும் ஜாதகர் ஈடுபடுவார் குறிப்பாக கணிதம், பௌதிகம் ,ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ,பத்திரிக்கை துறை, பொறியியல் துறைகளில் மேன்மை உண்டாகும்
கேது தரும் தொழில்கள்
- சட்டம் ,நீதித்துறை, மருத்துவம் ,அரசியல், மற்றும் மருந்து சார்ந்த தொழில் அல்லது வேலை அமையும்.
மொத்தத்தில் அவரவர் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தின் நிலை ஜீவனத்தை தீர்மானிக்கும் கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றை துல்லியமாக ஆராய்ந்து அதற்கேற்ப முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்