தசாபுத்தி பரிகாரங்கள்- புதன் தசா- கேது தசா-சுக்கிர தசா

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

தசாபுத்தி பரிகாரங்கள்

புதன் தசை

இதன் காலஅளவு 17 ஆண்டுகள் உங்கள் ஜாதகத்தில் புதன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அந்த தசை காலம் நல்ல அறிவு, புத்திசாலித்தனம், நினைவாற்றல், சுறுசுறுப்பு, கல்வியில் சிறப்பு, வேலைவாய்ப்பு என அனைத்தையும் அள்ளித்தரும்.
 புதன் தசை நடக்கும் போது பெருமாளை, நாராயணரை வணங்கவும். விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீநாராயணீயம், பாராயாணம் செய்வது சாலச்சிறந்தது. கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை புதன்கிழமைகளில் செய்யவும்
 
புதன் தசை-புதன் புத்தி (2 வருடம் 4 மாதம் 27 நாட்கள்)
காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் புத்தக தானம் நல்லது அது பள்ளி புத்தகமோ அல்லது பக்தி புத்தகமோ அல்லது வார ,மாத இதழ்கள் ஆகவோ இருக்கலாம். உங்கள் வீட்டுக்கு அருகில் வயதானவர்கள் இருப்பின் அவர்களுக்கு வார மாத இதழ்களை தொடர்ந்து வாங்கித் தரலாம்.
புதன் தசை-கேது புத்தி (11 மாதம் 27 நாட்கள்)
 புதன்கிழமை எந்த நேரத்திலும் தானியங்களை ஊற வைத்து ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடுக்கலாம்
புதன் தசை-சுக்கிர புக்தி (2 வருடம் 10 மாதம்)
 நண்பகல் 12:00 மணிமுதல் 7:00 மணிக்குள் பாசிப்பருப்பு பாயாசம் செய்து அருகில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
புதன் தசை-சூரிய புத்தி (10 மாதம்7 நாட்கள்)
 பகல் 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் யாருக்காவது துளசி இலைகள் அல்லது ஒரு பாக்கெட் கற்பூரம் வாங்கி கொடுக்கலாம்
புதன் தசை-சந்திர புத்தி (1வருடம் 5 மாதம்)
 காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு  வெற்றிலை, பாக்கு ,தாம்பூலம் கொடுக்கவும்
புதன் தசை-செவ்வாய் புத்தி (11 மாதம் 27 நாட்கள்)
 காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் பித்தளை பொருள் அல்லது கல்வி தடைபட்ட குழந்தைகளுக்கு புத்தகம் எழுது பொருள் வாங்கிக் கொடுக்கவும்
புதன் தசை-ராகு புத்தி (2 வருடம் 6 மாதம் 18 நாட்கள்)
 பகல் 12:00 மணி முதல் 1:30மணிக்குள் கரும்பச்சை நிற ஆடை, உணவு பொருள் என கருப்பும் பச்சையும் சேர்ந்த பொருள் தானம் செய்வது நன்று
 புத்திசாலித்தனமான ஏமாற்றுதலை தவிர்க்கலாம்
 
புதன் தசை-குரு புத்தி (2வருடம் 3மாதம் 6 நாட்கள்)
 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் பசுவுக்கு பச்சை நிற பழம் காய்கறிகள் கீரைகள் கொடுக்கவும். அருகிலுள்ள அந்தணருக்கு பச்சை வாழைப்பழம் போன்ற கனிகள் வாங்கிக் கொடுக்கவும்
புதன் தசை-சனி புத்தி(2 வருடம் 8 மாதம் 9 நாட்கள்)
 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் பச்சைப்பயறு சுண்டல் செய்து ஒரு சிறிய எவர்சில்வர் கிண்ணத்துடன் கொடுங்கள் அல்லது பச்சை காய்கறி கொடுக்கலாம் கரும் துளசி செடியை வளர்க்கவும்
தசாபுத்தி பரிகாரங்கள்

கேது தசை

கேது தசை 7ஆண்டுகள் நீடிக்கும் இது பெரும்பாலும் ஒரு பற்றற்ற நிலையை ஜாதகருக்கு கொடுக்கும். ஏதன் மூலம் மனம் வெறுத்துப் போகும் என்பதை கேதுவின் சாரநாதர் நிர்ணயம் செய்வார். கேது தசையில் காலத்தில் விநாயகர் வழிபாடும், சித்தர்கள் வழிபாடு சிறப்பு,
கேது கிறிஸ்தவர்களை குறிப்பதால் கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவது நன்று.
 
கேதுவின் பரிகாரங்களை எந்த நாளிலும் எந்த நேரத்திலும் செய்யலாம்
கேது திசை-கேது புத்தி(4மாதம் 27 நாட்கள்)
 ஆஞ்சநேயர் வழிபாட்டுக்கு செந்தூரம் வாங்கிக் கொடுக்கவும் ,முடிந்தபோது கொள்ளு சுண்டல் விநியோகம் செய்யவும்
கேது திசை-சுக்கிர புத்தி (1 வருடம் 2 மாதம் )
முடிந்த போது அத்திப்பழம், மொச்சை வாங்கி கொடுக்கவும்
 
கேது தசை-சூரிய புத்தி கால அளவு( 4 மாதம் 6 நாட்கள்)
 விநாயகர் கோவிலுக்கு மின்சார கட்டணம் கட்டலாம் அல்லது மின்சார விளக்கு வாங்கி கொடுக்கலாம்
கேதுதிசை-சந்திரபுத்தி (7 மாதங்கள்)
 சன்னியாசி அல்லது பிச்சைக்காரர்களுக்கு தண்ணீர் அல்லது குளிர்பானம் வாங்கிக் கொடுங்கள்
கேது தசை-செவ்வாய் புத்தி (4 மாதம் 27 நாட்கள் )
கோழி, சேவல் போன்றவற்றுக்கு தீவனம் தூவவும்
கேது தசை-ராகு புத்தி (1வருடம் 18 நாட்கள்)
 இந்த காலகட்டத்தில் உங்கள் இனம் மதம் அல்லாத மக்களுக்கு உணவு குடை, விசிறி, மாத்திரை போன்றவை வாங்கி கொடுக்கலாம். முடிந்தால் நாய், சேவல், போன்ற ஐந்தறிவு ஜீவன்களை தானம் கொடுப்பது மிக மிக நல்லது. இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்
கேது தசை-குரு புத்தி(11 மாதம் 6 நாட்கள்)
 ஆன்மீக மடங்கள், சித்தர் சமாதிகள், சித்தர் மடம்  போன்றவை சார்ந்த இடங்களில் உழவாரப்பணி எனும் தூய்மைப்படுத்தும் பணியை செய்யுங்கள் அல்லது சித்தர்களை வணங்கி அமைதியாக அமரவும்
கேது தசை-சனி புத்தி (1 வருடம் 1 மாதம் 9 நாட்கள்)
 கோவில்களில் வெள்ளை, காவி அடிப்பது மடங்களை சுத்தம் செய்வது, கோசாலைகளில் உதவி செய்வது போன்ற செயல்கள் மிக ஏற்புடையவை
கேது தசை-புதன் புத்தி (11 மாதம் 27 நாட்கள்)
 குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் எடுப்பது பக்தி புத்தகம் விநியோகம் பிறமொழி உதவி போன்றவை நன்று
தசாபுத்தி பரிகாரங்கள்

சுக்கிர திசை

சுக்கிர திசை 20 ஆண்டுகள் கொண்டது பொதுவாக சுக்கிர திசை என்றால் ‘அட நல்ல யோகம் தான் எனக் கூறுவது உண்டு’ எனினும் சிறு வயதில் வரும் சுக்கிரதசை கொட்டிக் கெடுக்கும் என்பர். சிறு வயதில் சுக்கிர திசை வரும் குழந்தைகளுக்கு வெகு கவனமாகக் கவனித்தல் அவசியம். அவர்கள் பாதை மாறும் நெறிபிழலும் சூழ்நிலை ஏற்படும். மேலும் ஜாதகத்தில் சுக்கிரன் அமையும் நிலையை பொருத்து பலன்கள் வேறுபாடு அடையும்
 சுக்கிரதிசை பரிகாரங்களை வெள்ளிக்கிழமைகளில் பின்பற்ற வேண்டும். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி தாயார் வழிபாடு அவசியம். மகாலட்சுமி அஷ்டோத்திரம் தியானம் நன்று.
 சுக்கிர திசை-சுக்கிர புத்தி (3 வருடம் 4 மாதங்கள்)
  காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் சர்க்கரை அல்லது மொச்சை தானம் நன்று.
சுக்கிர தசை- சூரிய புத்தி (1 வருடம்)
 பகல் 12:00 மணி முதல் 6:00 மணிக்குள் இனிப்பான பழங்கள் தானம் செய்வது நல்லது.
 சுக்கிர தசை-சந்திர புத்தி (1வருடம் 8 மாதங்கள்)
  காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் வயதான பெண்களுக்கு இனிப்பான பழச்சாறு வாங்கி கொடுங்கள்
 சுக்கிர தசை-செவ்வாய் புத்தி (1 வருடம்2 மாதங்கள்)
  காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் செடிகள் தானம் செய்வது நன்று. இதனை இளம் வயது மற்றும் சிறுமி சிறுவர்களுக்கு கொடுங்கள்
  
சுக்கிர திசை-ராகு புத்தி (3வருடங்கள்)
 10:30 மணி முதல் 12:00 மணிக்குள் பிறமத பெண்களுக்கு அலங்காரப்பொருட்கள் கொடுங்கள், மேலும் உணவு சமைக்க அஞ்சறைப்பெட்டி பொருட்களான கடுகு, வெந்தயம், உளுந்து, பருப்பு, மசாலா பொருட்களையும் வாங்கி தானம் கொடுக்கலாம்
சுக்கிர தசை-குரு புத்தி (1வருடம் 8 மாதம்) 
காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் படிக்கும் குழந்தைகளுக்கு பச்சை அல்லது வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் செய்து கொடுக்கவும். பசுவுக்கு சர்க்கரை கலந்த தீவனம் கொடுக்கவும்
சுக்கிர தசை-சனி புத்தி( 3 வருடம் 2 மாதம்)
 காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் வேலைசெய்யும் பொண்ணுக்கு பப்பாளி பழம் வாங்கித் தரவும். துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு அல்லது உணவு வாங்க பணம் கொடுத்து உதவுங்கள்
 சுக்கிர திசை-புதன் புத்தி (2 வருடம் 10 மாதம்)
  காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் சிறு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பான சத்துள்ள பாரம்பரிய உணவுகளை வாங்கி கொடுங்கள்
சுக்கிர திசை -கேது புத்தி (2 ஒரு வருடம் 2 மாதம்)
 வெள்ளிக்கிழமை விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்
தசாபுத்தி பரிகாரங்கள்
மேற்கண்ட பரிகாரங்கள் அனைத்தும் தினசரி வாழ்வியலோடு சேர்ந்த செய்யக் கூடியவை ஆகும் இதற்கென தனியாக பொருட்கள் வாங்கத் தேவையில்லை வீட்டில் இருக்கும் பொருள்களையும் வீட்டில் செய்யும் பதார்த்தங்களையும் கொண்டே பரிகாரம் செய்து விடலாம் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதும் மழையளவு தேவையில்லை மனம் அளவு போதும்..

Leave a Comment

error: Content is protected !!