Homeஅடிப்படை ஜோதிடம்12 ராசிக்கும் குரு பகவான் தரும் பலன்கள்- வராக மிகிரர்

12 ராசிக்கும் குரு பகவான் தரும் பலன்கள்- வராக மிகிரர்

12 ராசிக்கும் குரு பகவான் தரும் பலன்கள்

மேஷம் -விருச்சிகத்தில் குரு பகவான்

மேஷம்-விருச்சிகத்தில் குரு இருக்கப் பிறந்தவர் நல்ல அளவில் தனம் உடையவனாகவும், அழகு உள்ளவனாகவும், சேனாதிபதியாகவும், நல்ல மனைவி-புத்திரர்கள் உடையவனாகவும், தானம்-தர்மம் செய்பவனாகவும், நல்ல வேலையாட்கள் உள்ளவனாகவும், பொறுமை உள்ளவனாகவும், பிரசித்தியும்-புகழும்- கௌரவமும் உடையவனாகவும், சாந்தகுணம் உள்ளவனாகவும், சுகமான வாழ்க்கை உடையவனாகவும் இருப்பான்.

ரிஷபம் -துலாம் ராசியில் குரு பகவான்

ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் குரு இருக்கப் பிறந்தவர் நோயற்றவனாகவும், தனவந்தனாகவும், சுகமாக வாழ்பவனாகவும், தான தர்மம் செய்யும் தயாளகுணம் உள்ளவனாகவும், வெகுஜன பிரியனாகவும், புத்திரர்கள்-சினேகிதர்கள் உடையவனாகவும் இருப்பான்.

மிதுனத்தில் குரு பகவான்

மிதுனம் மற்றும் கன்னி ராசியில் குரு இருக்க பிறந்தவன் சுகமாக வாழ்பவனாகவும், அனேக வீடுகளையும்- ஆடைகளையும் உடையவனாகவும், புத்திரர்கள்-சினேகிதர்கள்-வேலையாட்கள் உள்ளவனாகவும்,மந்திரியாகவும் இருப்பான்.

கடகத்தில் குரு பகவான்

கடகத்தில் குரு இருக்க பிறந்தவன் நவரத்தினங்களும்-தனமும்-சுகமும்-அறிவு-புத்தி கூர்மை ஆகியவை உள்ளவனாகவும், நல்ல மனைவி-புத்திரர்கள் உடையவனாகவும் இருப்பான்.

குரு பகவான் தரும் பலன்கள்

சிம்மத்தில் குரு பகவான்

சிம்மத்தில் குரு இருக்க பிறந்தவன் புகழ்- கீர்த்தி உடையவனாகவும், சேனாதிபதியாகவும், நவரத்தினம்-பொன்- தனம்-சுகம்-புத்திக்கூர்மை-நல்ல மனைவி- புத்திரர்கள் உள்ளவனாகவும் இருப்பான்.

தனுசு -மீனத்தில் குரு பகவான்

தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் குரு இருக்க பிறந்தவன் தனவந்தனாகவும், கிராமங்களுக்கு அதிபதியாகவும், அதிகாரம் உள்ளவனாகவும், மந்திரி-சேனாதிபதி- அரசாங்க உயர் அதிகாரியாகவும் இருப்பான்.

மகரத்தில் குரு பகவான்

குரு மகரத்தில் இருக்க பிறந்தவன் அற்பமான தனம் உடையவனாகவும், துக்கம் உடையவனாகவும், சுகம் இல்லாதவனாகவும், குலத்துக்கு ஏற்புடையதாக இல்லாத தகாத-தாழ்ந்த காரியங்களை செய்பவனாகவும், தேச சரியாகவும் இருப்பான்.

கும்பத்தில் குரு பகவான்

கும்பத்தில் குரு இருக்க பிறந்தவன் சினேகிதர்கள் உடையவனாகவும், அதே சமயம் அவர்களின் நயமான வார்த்தைகளில் மயங்குபவனாகவும், நிலையற்ற தன்மை உடையவனாகவும், அதாவது தனம் சேர்வதும் தனம் இழப்பதுமாக உள்ளவனாகவும், சுகபோகங்களை அனுபவிக்கும் பெண்ணாசை உடையவனாகவும் இருப்பான்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!