Friday, July 5, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்முக்கிய ஜோதிட விதிகள்

முக்கிய ஜோதிட விதிகள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

முக்கிய ஜோதிட விதிகள்

  • சனி சுக்கிரன் இல்லத்தில் இருப்பது இல்லறத்தை பாதிக்கலாம். சனி லக்னாதிபதி சுக்கிரன் வீட்டில் இருப்பது நலமே.
  • லக்னாதிபதி 6, 8 ,12 போன ஸ்தானங்களில் அமையப் பெற்றவர்களுக்கு 5, 7, 10 ,11க்குரியவர்கள் பலம் பெற்று நல்ல இடத்தில் நிற்பது நலமே.(திறத்தால் உயராவிடினும்,இணைந்தால் கை தூக்கி விடுவார்).
  • லக்னாதிபதி பலம் பெற்று 5, 7, 10 ,11 ஆகிய இடத்தின் அதிபதிகளோடு சேர்ந்து உள்ளவர்கள் பெரிய நிலையை தொடமுடியும்.
  • 7 ல் செ , ( அ ) 8 ல் சனி ( அ ) சந்திரன் – சுக்கிரன் 6 , 8 ஆக வருவது கூடாது . இல்லற பாதிப்பு , மறுமணம் , திருமணமானவர்களை சேரும் அமைப்பு தரும்.
  • கேந்திராதிபதி தோஷம் , சகடதோஷம் அஸ்தமன தோஷம் இருப்பின் , குரு , சுக் , புதன் பார்வையால் நன்மை இல்லை .
  • ராகு , கேது , 2 , 8 ல் இருந்தால் தோஷம் ஆனால் மேஷம் , ரிஷபம் , மிதுனம் , சிம்மம் , தனுசு ராசியில் இருப்பின் தோஷம் இல்லை.
  • சனி , சுக்கிரன் , சேர்க்கை 3 ல் இருப்பின் முன்பின் யோசிக்காமல் எதும் செய்யநேரிடும் . மணவாழ்வில் சச்சரவு உண்டு.
  • சனி , சுக் , சேர்க்கை 6 ல் இருப்பின் நல்ல விஷய ஞானங்கள் இருந்தும் சோபிக்காது. பல பெண்களை போகித்தவன் , தாரதோஷம் உண்டு.பெண்களால் அபகீர்த்தி உண்டு.பல ஊர்களை சுற்றிய காமுகன் ஆவான்.
  • 7 க்குரியவர் சுபராகி பலமான சனியோடு எங்கு சேர்ந்து இருப்பினும் புனர்பூயோகம் . மறுமணம் புரியும் யோகம் வரலாம்.
  • லக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு 5 , 9 ல் சந் , சூரி , இருப்பின் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுவர் .லக்கினாதிபதியோடு எத்தனை கிரகம் சேர்ந்தாலும் அத்தனை பலமும் லக்கினத்திற்கு கிடைக்கிறது.
  • 6 – ம் பாவம் பலம் பெற்று இருந்தால் வாத பித்த சிலோத்தும் மாதுஸ்திரிதோஷத்தால் உடல் பாதிப்பை அடைவர் . நவாம்சநிலையை பார்க்கவும்.
  • 8 ம் பாவம் பலமாக இருந்தால் ஸ்திரி கோபத்தால் தேவ-குரு,பிதுர், தெய்வ தோஷத்தால் பாதிப்பை அடைவர்.நவாம்ச நிலையை பார்க்கவும்.
  • 12 ம் பாவம் பலமாயிருந்தால் ஸ்தீரி சாபத்தால் போட்டி பொறாமை வைராக்கியத்தால் தோஷத்தால் மாந்தீரிக குற்றத்தால் பாதிப்பை அடைவர்.நவாம்ச நிலையையும் பார்க்கவும்.
  • புதன் தான் நின்ற வீட்டிற்கு 5,7 ஆதிபத்திய பலனோ ( அ ) அந்த வீட்டு ( அ ) அந்த வீட்டின் அதிபர் நின்ற இடத்தின் பலனை சிறப்பாகத் தருவார்.
  • சனி , அந்தந்த பாவத்துக்கு 8 க்குரியவர் நவாம்ச ராசியில் உள்ள இடத்தை அடையும்போது அந்த பாவத்துக்கு தீங்கு ஏற்படும்.
  • சூரியனுடைய அஷ்டவர்க்கத்தில் சூரியன் தான் இருக்கும் ராசியில் எத்தனை பரல் உள்ளதோ அத்தனையாவது கர்ப்பமான நபராக இருப்பார்.
முக்கிய ஜோதிட விதிகள்
  • ஒரு வீட்டில் தனியாக ஒரு கிரகம் யார் சேர்க்கை பார்வை பரிவர்த்தனை இன்றி இருப்பின் , அக்கிரகத்தின் காரகத் தன்மைக்கு பிரபலம் இராது .
  • தனித்தனியாக கிரகங்கள் நிற்குமாயின் , அக்கிரகங்களின் சுயபலம் எவ்விதத்திலும் அதிக பலம் ஏற்பட்டு இருந்தாலும் அது வேறு கிரகத்தின் இணைவு பலத்தை காட்டிலும் குறைவானதே.
  • தனி கிரகமாய் நிற்கும் கிரகம் எவ்விதத்தாகிலும் பலம் பொருந்தியதாயினும் அந்த பாவகத்தின் காரக பலனைத் தவிர கூட்டுப்பலன் கிடையாது.
  • ஒரு கிரகம் தனியாக இருப்பதைவிட வேறு கிரகத்துடன் இணைந்து இருப்பது அதிக பலத்தைத் தரும் . அப்படி இணைந்து இருப்பதால் , அந்த பாவக பலன் அதிகப்படும்.
  • சுக்கிரனோடு , குரு , சனி , கேது சேர்ந்தாலும் பார்த்தாலும் , மனைவியோகம் கிட்டாது.

ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின் லட்சுமி யோகம்.

  • லக்கினத்தில் குரு சுக் சேர்க்கை 3 ல் செவ் , சனி சேர்க்கை இருப்பின் லட்சுமி யோகம் , 25 வயதுக்கு மேல் யோகம் தரும்.
  • இரு ஆதி பத்தியம் பெற்று உள்ள கோள்கள் முதலில் மூலத்திரிகோணராசி பாவபலனையும் பின் சுயக்ஷேத்திர பலனையும் தரும்.
  • நவாம்ச லக்கினாதிபதி ஆண் கிரகத்தோடு 3,7 , 8 , 9 ல் இருப்பின் திருமண வாழ்வு இராது.சரிபடாது.
  • எந்த லக்கினமானாலும் சரி , துலாராசியில் தனித்த சுக்கிரன் , விருச்சிக ராசியில் தனித்த செவ்வாய் பார்வையும் பெறாமல் இருந்தால் மேற்படி தசாபுத்திகாலங்களில் , கணவன் ( அ ) மனைவி பிரிவினை ஆயுள் தோஷம் கண்டம் ஏற்படலாம்.
  • அஸ்தமனத்தில் இருக்கும் கிரகம் தசாபுத்தி காலங்களில் சிறப்பைத் தராது ஜெனன காலத்தில் அஸ்தமனமான கிரகம் . கோச்சாரத்தில் அஸ்தமனம் பெற்று அக்கிரகத்து தசாபுத்தியும் இருப்பின் எக்காரியமும் சோபிக்காது.
  • 6,8ம் பாவாதிபதிகள் ஒன்றாய் கூடி சனி சேர்க்கை பார்வை பெற்று இருப்பின் அற்ப ஆயுள்.
  • மேஷம்,மிதுனம்,கடகம், துலாம்,விருச்சிகம் இவற்றில் 8க்குரியவர்,மீனத்திற்கு2,7க்குரியவர்,தனுசு ,கன்னிக்கு11க்குரியவர்,ரிஷப மகரத்திற்கு 6க்குரியவர்,சிம்மத்திற்கும்7க்குரியவர்பலத்தை அறிந்து

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்527அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்34சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular