Friday, July 5, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன் - 20.6.2024

இன்றைய ராசி பலன் – 20.6.2024

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன் – 20.6.2024

மேஷம்

உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

இன்றைய ராசி பலன்

மிதுனம்

குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்

கடகம்

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

சிம்மம்

இன்றைய ராசி பலன்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

கன்னி

நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

துலாம்

உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

இன்றைய ராசி பலன்

தனுசு

குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்527அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்34சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular