Homeஜோதிட தொடர்7ம் பாவத்தின் முக்கிய விதிகள்

7ம் பாவத்தின் முக்கிய விதிகள்

7ம் பாவத்தின் முக்கிய விதிகள்

  • 7 – ல் புதன் – சுக்கிரன் சேர்க்கை நல்ல ஸ்திரீகளுடன் கூடி போக சுகத்தை அனுபவித்தால் , தனம் , பலருக்கு , வேண்டியவனாகவும் , சுகமுள்ளவ னாகவும் இருப்பர்.
  • 7 – க்குரியவர் மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனத்தில் இருப்பின் பகையால் துன்பம் , துஷ்டர் களால் பழி பாவம் சங்கடம் உண்டு.
  • 7 – ல் சந்திரன் புதன் , 4 – க்குரியவர் சேர்க்கை பெற்று சந்திரன் செவ்வாய் பார்வை பெற்று இருப்பின் காதலால் பீடிக்கப்பட்டு காமத்தில் லீனா வினோதம் புரிவார் .சிலர் பெண்களை கண்டாலே வெறுப்படைவர்.வசதிகள் நன்றாக இருக்கும்.
  • 7 – ல் சனி , 12 – க்குடையவருடன் செவ்வாய் சேர்க்கை பெற்று 4 – ல் இருக்க சகோதரி விதவையாவாள்( அ ) புத்திரர் இருக்காது.இவனுக்கு 2 தாரம் உண்டு.இல்லறம் சோபிக்காது.
  • 6,8,12 ல் 4 க்குரியவர் குரு – சுக்கிரன் சேர்க்கை பெற தாரம் இரண்டு கஷ்டங்களால் தொல்லை.கடன் தொல்லையும் உண்டு..
  • 7 ல் குரு , சனி , புதன் , பெண்களால் பலகேடுகள் உண்டு . 7.அம்சாலக்கினத்திற்கு 7 ல் சனி , புதன் சேர்க்கை ( அ ) சனி சந்திரன் சேர்க்கை இருப்பின் ஒருமுறை விவாகம் ஆன பெண்ணை மணப்பார்.
  • 7 ல் புதன் குரு சேர்க்கை இருந்து சனியால் பார்க்கப்பட்டு அம்சத்தில் சுக்கிரனுடன் சம்பந்தப்பட்டு சனி வீட்டில் அமர்ந்தால் கன்னி கழியாத பெண்னை புணர்ச்சி செய்ய அவல் உள்ளவன்.
  • 7 க்கு 10 க்குரியவர் செவ்வாய் விட்டில் அமர்ந்து சூரியனுடன் கலந்து சுபர் பார்வை பெற்றால் ரணசிகிச்சையில் தேர்ச்சி பெற்ற டாக்டரை மணக்கலாம்.
  • 7 க்குரியவர் 11 ல் , 3 , 6 , 8 ல் சுக்கிரன் , செவ்வாய் , ராகு சேர்க்கை 2 – ல் கேது இருப்பின் , காதல் திருமணம் ஏற்பட்டு , மறுவிவாகம் ஏற்படும்.வாழ்க்கை பெரும்பாலும் அமைதியில்லாமல் காணப்படும் .இல்லறம் சோபிக்காது.
  • 1,2,3க்குரியவர் சேர்க்கை 1ல் இருந்து 3ல் பாவர் அமர்ந்தால் ,7க்குரியவர் 11ல் இருப்பின் ஏக களத்திரம், திருமணத்திற்கு பிறகு நல்ல யோகம், மனைவி நல்ல குணம் ,கல்வி தகுதி பணபலம் உடையவளாக இருப்பாள்.
7ம் பாவத்தின் முக்கிய விதிகள்
7ம் பாவத்தின் முக்கிய விதிகள்
  • 7க்குரியவர் 3ல் நட்பு ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரன் நீசபங்கம் பெற்று, குடும்பாதிபதி உச்சம் பெற்றால் நல்ல வசதியும் வாய்ப்பும் உள்ள பெண் மனைவியாக அமைவாள்.திருமணத்திற்கு பிறகு நல்ல யோகம் உண்டு.
  • இருவர் ஜாதகத்திலும் 2,7 – மிடங்களில் சுபரும் பாவரும் ஆக கலந்து இருப்பது தோஷம்.விவாகரத்து போன்றவையும் , வேறு நபர் சேர்க்கையும் , அன்னிய ஸ்திரீ சேர்க்கையும் ஏற்படலாம்.
  • இருவர் ஜாதக லக்கினமும் ஒன்றுக்கொன்று பாதக லக்கின பாவகமாக வரக் கூடாது.
  • இருவரும் ஒரே மாதம் ஒரு பட்சம் என பிறப்பு இருப்பது கூடாது.மலமாத , க்ஷய மாத ஜனனம் கூடாது.
  • பெண் ஜாதக லக்கினாதிபதியானவர் , ஆண் ஜாதகத்தில் 1 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 – ல் இருக்க வேண்டும்.நீசம் அஸ்தமனம் பகை பெறாமல் இருப்பது.இதேபோல் , ஆணிற்கும் பார்க்கவும்.
  • ஆண் – பெண் ஜாதகத்தில் 1 , 2 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 -க்கு உரியவர்கள் ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் 2 , 6,8 , 12 – ல் அல்லது நீசம் – அஸ்தமனம் பெறாமல் இருப்பது முக்கியம்.
  • 1 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 ஆன இந்த பாவாதிகளில் குறைந்தது நான்கு பாவாதிபதிகளாவது இருவருக்கும் நன்றாக இருக்க வேண்டும் .
  • ஆணின் ஜென்ம லக்கின ராசியே , பெண்ணின் சந்திரன் நின்ற ராசியாக வருவதும் , ஆணின் ஜென்ம ராசியே பெண்ணின் ஜென்ம லக்கினமாக வருவது மிகச் சிறப்பு .
  • பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற இடமே ஆணின் ஜென்ம லக்கினமாக வருவதும் , ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற இடமே பெண் ஜென்ம லக்கினமாக வருவதும் மிகச் சிறப்பு .
  • ஆணின் களத்திர ஸ்தானாதிபதி ( 7 – க்குரியவர் ) நின்ற வீடே பெண்ணின் ஜென்ம லக்கினமாக வருவதும் , பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானாதிபதி ( 8 – க்குரியவர் ) நின்ற வீடே லக்கினமாக ஆணுக்கு வருவதும் சிறப்பு.

விதிகள் தொடரும்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!