தை மாதம் உங்கள் ராசிக்கு அதிஷ்டம் அளிக்குமா ? தைமாத ராசிபலன் -2024

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

தைமாத ராசிபலன்

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)’

சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், சுக்கிரனும் ஆதரவாக இருப்பதால், இம்மாதம் முழுவதும் பணப்பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை!ஜென்ம ராசியில் குரு இருப்பதால், குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். வீண் அலைச்சலும், உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும், அலுப்பை ஏற்படுத்தும். விரய ஸ்தானத்தில்நிலை கொண்டுள்ள ராகுவினால், எதிர்பாராதசெலவுகளும், பண விரயமும் ஏற்படும்.

மாதம்முழுவதும் சூரியன் சுப பலம் பெற்றுள்ளதால், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.கேதுவின் நிலையினால், முயற்சிகள் அனைத்தும்பயன் தரும், திருமண முயற்சிகளுக்கு இம்மாதம்கிரக நிலைகள் சாதகமாக இல்லை! ஆதலால், ஒத்திப்போடுவது நல்லது. ஒரு சிலருக்கு,வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுஉள்ளது. வெளிநாட்டில் பணியாற்றிவரும்பிள்ளை அல்லது,பெண்ணைப் பார்ப்பதற்காக,வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உள்ளதை கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

 தைமாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

அருகில் உள்ள ஆலயத்தில் மண் அகலில் 5 எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.

பலன் தரும் தினங்கள்

தை: 1,2,6-10,14-17,23-25,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 20 இரவு முதல் 22 பின் இரவு வரை

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

ராசி நாதனான சுக்கிரன், தை மாதம் 5-ம் தேதியிலிருந்து அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால், அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. வரவும் செலவும் சமமாக இருக்கும். சேமிப்பிற்கு சாத்தியமில்லை.

பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் கேது நிலைகொண்டுள்ளதால், குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவும். தீர்த்த, தல யாத்திரை ஒன்று கிடைப்பதற்கும் அனுகூலமான கிரக நிலை இது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பலன் கிடைப்பது சற்று கடினமே!

 தைமாத ராசிபலன்

தை 21-ம் தேதி வரை செவ்வாய், அஷ்டமஸ்தானமாகிய தனுர் ராசியில் அமர்ந்திருப்பதால்,உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.பிறருடன் தேவையற்ற வாக்கு வாதங்களையும் தவிர்த்தல் வேண்டும். செவ்வாய்க்கு, குருபகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், தோஷம் குறைகிறது.

பலன் தரும் பரிகாரம்

தினம் தோறும் கந்தசஷ்டி கவசம் படிப்பதும் கேட்பதும் நல்ல பலன்களை தரும்.

பலன் தரும் தினங்கள்

தை: 3-5,11-14,18-22,26-28

சந்திராஷ்டம தினங்கள்

தை : 23 முதல் 25 காலை வரை

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியானகுரு பகவான், லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது, மிகவும் அனுகூலமான கிரக சஞ்சார நிலையாகும். வருமானம் இம்மாதம் முழுவதும் திருப்திகரமாக இருக்கும். தை 21-ம் தேதி வரை களத்திர ஸ்தானத்தில், செவ்வாய்
அமர்ந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உஷ்ண சம்பந்தமான பிணிகள், ரத்த அழுத்தம், கை – கால்களில் மூட்டு வலி ஆகியவை உடலை வருத்தும்.

இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

மருத்துவ சிகிச்சையை தவிர்க்க இயலாது. மாதம் முழுவதும் சுக்கிரன் அனுகூலமாக இல்லை. செவ்வாயும், சுபபலம் பெற்றிருக்கவில்லை. கணவர் – மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால், வீண் செலவுகளில் பணம் விரயமாகும். லாப ஸ்தானத்தில், குரு பகவான்
நிலைகொண்டிருப்பதால், பணப் பற்றாக்குறை இராது. தை 21-ம் தேதி, செவ்வாய் அஷ்டம ராசிக்கு மாறுவதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.

 தைமாத ராசிபலன்

பலன் தரும் பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் அருகில் இருக்கும் திருக்கோயில் ஒன்றில் மண் அகலில் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வந்தால் அற்புத பலன் கிடைக்கும்

பலன் தரும் தினங்கள்

தை: 2-4,8-11,15-17,21-24,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 25 காலை முதல் 27 முற்பகல் வரை

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே அனுகூலமாக இல்லை, இம்மாதம் முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனி பகவானாலும் நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது !! தை 20-ந் தேதி வரை செவ்வாய் அனுகூலமான நிலையில் வலம் வருகிறார். இம்மாதம் கவலை தருவது, கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனி பகவானால் ஏற்பட்டுள்ள தோஷமேயாகும்.

 தைமாத ராசிபலன்

குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். சிறு விஷயங்களுக்காகக்கூட அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். குருவும், சாதகமாக இல்லாததால், குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.
“எங்கே போனது கைப்பணம் …? ” -என்று நீங்களே வியக்கும் வண்ணம் பணம் செலவழியும். திருமண முயற்சிகளில், பிரச்னைகள் ஏற்பட்டு கவலையை அளிக்கும். நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரால் மன நிம்மதி பாதிக்கப்படும்.

இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம் பலன்கள் மற்றும் பரிகாரம்

பலன் தரும் பரிகாரம்

திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு(அக்னீஸ்வரம்), சூரியனார் கோயில் தரிசனம் கைமேல் பலனளிக்கும்.

பலன் தரும் தினங்கள்

தை: 2-4,8-10,14-17,21-25

சந்திராஷ்டம தினங்கள்

தை : 1 மீண்டும் 27 முற்பகல் முதல் 29 பிற்பகல் வரை

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)

குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே இம்மாதம் முழுவதுமே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். ராசி நாதனாகிய, சூரியனும், உங்கள் பக்கம்தான் !! தை 21-ந் தேதியிலிருந்து, செவ்வாயும் உங்களுக்கு அனுகூலமாக மாறுகிறார்! இருப்பினும், சனி மற்றும் ராகு ஆகிய இருவரும் சாதகமற்ற நிலைகளில், அமர்ந்துள்ளனர். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். பண வசதி குறையாமல் பார்த்துக்கொள்வார்கள், குருவும், சுக்கிரனும் !! திருமண முயற்சிகளுக்கு, மிகவும் சாதகமான மாதம் இது.

 தைமாத ராசிபலன்

குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே சிறந்த சுப பலம் பெற்று விளங்குவதால், நல்ல வரன் அமையும். அஷ்டமத்தில் நிலைகொண்டுள்ள ராகுவின் காரணமாக, அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும், பண விரயமும் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

24 சனிக்கிழமைகள் அருகில் இருக்கும் கோவில் அல்லது வீடுகளில் மாலை 05:30 முதல் 07:30க்குள் விளக்கேற்றி வர நல்ல மாற்றம் கிட்டும்.

பலன் தரும் தினங்கள்

தை:1,5-10,14-17,21-23,26,27

சந்திராஷ்டம தினங்கள்

தை : 2 முதல் 4காலை வரை.மீண்டும் 29 பிற்பகல் வரை

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

சுக்கிரன், இம்மாதம் முடியும் வரை அனுகூல நிலையில் சஞ்சரிக்கிறார்! வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். அஷ்டம
ராசியில் சஞ்சரிக்கும் குருவினால், நன்மைகளை எதிர்பார்க்க இயலாது !! பணம், பொருட்கள் களவுபோக நேரிடும். பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

சப்தம (7) ஸ்தானத்தில் ராகு பலம் வாய்ந்து அமர்ந்திருப்பதால், மனைவியின் உடல் நலனில் கவனமாக இருத்தல் நல்லது. சிறு உபாதையானாலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். கணவர் – மனைவியரிடையே சிறு, சிறு கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

 தைமாத ராசிபலன்

குழந்தைகள், தன்னிச்சையாக நடந்துகொள்வார்கள். மாதத்தின் கடைசி வாரத்தில், எதிர்பாராத செலவு ஒன்று ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. சிலருக்கு, வீடு மாற்றத்திற்கும் வாய்ப்பு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பலன் தரும் பரிகாரம்

வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று பசு நெய் கலந்து தீபம் ஏற்ற நல்ல காலம் கூடி வரும்.

பலன் தரும் தினங்கள்

தை: 1-3,7-10,14-17,22-24,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 4 காலை முதல் 6 பிற்பகல் வரை

துலாம்

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன், மாதம் முழுவதும் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக, சஞ்சரிக்கின்றார். குருவும் உங்கள் பக்கம்தான்! “கொடுப்பதில், கர்ணன்” -என ஜோதிட கிரந்தங்களில் புகழப்படும் ராகுவும், உங்களுக்குச் சாதகமாக நிலைகொண்டுள்ளார். குடும்பத்தில், மகிழ்ச்சியும், மன நிறைவும் நிலவும். போதிய அளவில் வருமானம் இருப்பதால், பணப் பிரச்னை இராது.

 தைமாத ராசிபலன்

கணவர் – மனைவி, குழந்தைகளிடையே பரஸ்பர அன்பும், பாசமும், நிலவும். பலருக்கு, சொந்த வீடு அமையும் பாக்கியம் உள்ளதையும் செவ்வாயின் நிலை எடுத்துக்காட்டுகிறது. சப்தம ஸ்தானத்தில், குரு அமர்ந்திருப்பது, துலாம் ராசியில் பிறந்துள்ள பல பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் யோகம் உள்ளதைக் குறிப்பிடுகிறது. சிலருக்கு, தற்போதைய இருப்பிடத்தைவிட, மேலும் வசதியான வீட்டிற்கு மாற்றம் செய்ய யோகமும் அமைந்துள்ளது. ஆரோக்கியம் திருப்திகரமாக
இருக்கும்.

பலன் தரும் பரிகாரம்

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாலை வேளையில் வீட்டின் பூஜை அறையில் பசுமை தீபம் ஏற்றி வர நினைத்தது நடக்கும்.

பலன் தரும் தினங்கள்

தை:1-4,9-11,15-18,22-24,28

சந்திராஷ்டம தினங்கள்

தை : 6 பிற்பகல் முதல் 8 மாலை வரை

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)

சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூவரும் அனுகூலமாக அமர்ந்திருக்கும்
நிலையில், இந்தத் தை மாதம் பிறக்கிறது, உங்களுக்கு! குரு, ராகு ஆகியோர் சாதகமாக இல்லை !! ராசி நாதனாகிய செவ்வாய், தை 21ம் தேதியிலிருந்து உங்களுக்கு அனுகூலமாக மாறுகிறார். வரவும் – செலவும் சமமாகவே இருக்கும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டுள்ளதால், குழந்தைகளின்
ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நெருங்கிய உறவினர்களுடன் பரஸ்பர ஒற்றுமை குறையும்.

விவாக வயதில் பெண் அல்லதுபிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். அதிக அலைச்சலும், உடல் உழைப்பும் சோர்வை ஏற்படுத்தும். “ஆறில் குரு, ஜீவ நதியும் வற்றும் …! ” -என்பது மூதுரை. அதாவது, ராசிக்கு 6-ம் இடத்தில் குரு வரும்போது, எத்தனை வருமானம் வந்தாலும், அவையனைத்தும் எதிர்பாராத செலவினங்களினால், விரயமாகிவிடும் என்பதே அதன் பொருள்! (ஆதாரம்: “பிருஹத்
ஜாதகம்”).

 தைமாத ராசிபலன்

கணவர் – மனைவியிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். பூர்வீக சொத்து சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

தினமும்ஸ்ரீலட்சுமி நரசிம்மரின், மந்திர ராஜ பத ஸ்தோத்ரம் சொல்லி வருதல், மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பலன் தரும் தினங்கள்

தை: 3-6,11-13,18-20,24-26,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 8 மாலை முதல் 10 பின் இரவு வரை

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குரு, சுக்கிரன், சனி ஆகிய மூவரும் இம்மாதம் முழுவதும், சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், பண வசதிக்குக் குறையிராது. குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தைப் பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும். அர்த்தாஷ்டக ராசியான மீனத்தில், ராகு அமர்ந்திருப்பதால், அதிக அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும்
ஏற்படும்.

 தைமாத ராசிபலன்

பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் குரு நிலைகொண்டிருப்பதால், திருமணமான பெண்மணிகளுக்குக் கருத்தரிக்க உகந்த மாதம் இது! சனி உதவிகரமாக உள்ளதால், முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும். நீதிமன்ற வழக்குகளில், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம்.

பலன் தரும் பரிகாரம்

ராகு மற்றும் செவ்வாய் ஆகிய இருவருக்கும் பரிகாரம் செய்வது அவசியம். திருநாகேஸ்ரம் மற்றும், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம், மிகவும் ஏற்றது. கோயிலுக்குச் செல்லும்போது, தீபத்தில், நல்லெண்ணெய் சேர்க்கத் தவறாதீர்கள்.

பலன் தரும் தினங்கள்

தை: 1-3,7-9,14-18,22-24,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 10 பின் இரவு முதல் 13 பிற்பகல் வரை

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

ஏழரைச் சனியின் கடைசி பகுதியில் இருப்பது, இதுவரை அவரால் ஏற்பட்டிருந்த பிரச்னைகள், சோதனைகள் ஆகிய அனைத்தும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும் என விவரிக்கிறது, புராதன ஜோதிட கிரந்தங்கள். மேலும், மகரம், சனி பகவானின் ஆட்சி வீடாகும்! சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய இருவரும், யோக பலன்களை அளிக்கும் நிலைகளில் சஞ்சரிக்கின்றனர்.

பல முறைகள் நாங்கள் விளக்கியுள்ளபடி, “கொடுப்பதில், ராகுவிற்கு நிகரில்லை!” எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியக்கூறு உள்ளது. முயற்சிகள் அனைத்திலும், வெற்றியைத் தேடித் தருவார், ராகு !! சுக்கிரனின் நிலையினால், குடும்பத்தில், ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும். தை 21-ம் தேதி செவ்வாய், ஜென்ம ராசிக்கு மாறுவதால், வீண் அலைச்சலும், உஷ்ண சம்பந்தமான உபாதைகளும் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடும்.

 தைமாத ராசிபலன்

ஏற்கெனவேயே, மற்றொரு அக்னி கிரகமான சூரியன் நிலைகொண்டிருக்கிறார்.
கூடியவரையில், கூட்டங்கள் நிரம்பியுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், தொற்றுநோய் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரகநிலைகள்
குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமைகள் தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், ஐந்து அல்லது ஒன்பதுமண் அகல்களில் நல்லெணெய் தீபம் ஏற்றிவந்தால் போதும். வீட்டின் பூஜையறையிலும் இதனைச் செய்து வரலாம். அதே பலன் கிட்டும்.

பலன் தரும் தினங்கள்

தை: 1-4,8-11,16-24,28,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 13 பிற்பகல் முதல் 15 பின் இரவு வரை

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

ஜென்மச் சனியின் பிடியில் இருப்பினும், கும்பம் அவரது உன்னத ஆட்சி வீடாகும். ஆதலால், பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும். வாக்கு, தனம், குடும்ப ஸ்தானத்தில், ராகு சஞ்சரிப்பதாலும், குரு பகவானும், ராசிக்கு மூன்றாம் இடத்தில் நிலைகொண்டுள்ளதாலும், கைப் பணம் கரையும். வருமானம் நல்லபடி இருப்பினும், கைப்பணம் பல வழிகளிலும் செலவழியும். எந்தச் செலவையும் கட்டுப்படுத்த இயலாது.

நண்பர்களுக்கு உதவ சக்திக்கு மீறிய, வாக்குறுதிகளை அளிப்பது, பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது, போன்ற தவறுகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மனதில் உறுதி அவசியம்! நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமாக, நீதிமன்றம்செல்ல நேரிடும். திருமண முயற்சிகளை இம்மாதம் ஒத்திப்போடுவது நல்லது.

 தைமாத ராசிபலன்

உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையாக இருங்கள். அஷ்டம ஸ்தானத்தில், கேது நிலைகொண்டுள்ளதால், அதிக அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரையில், தேவையில்லாமல், வெளிச்செல்வதைத் தவிர்ப்பது, உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். மீண்டும் “கொரோனா” தொற்று, தலையெடுப்பது பற்றி அரசாங்க அறிக்கைகள் கவலையளிக்கின்றன. இதனை நினைவில் கொள்ளுங்கள்.

பலன் தரும் பரிகாரம்

திருநள்ளாறு தரிசனம் கைமேல் பலனளிக்கும்.

பலன் தரும் தினங்கள்

தை: 1,2,6,7,11-14,19-24,28,29

சந்திராஷ்டம தினங்கள்

தை : 15 பின் இரவு முதல் 18 பிற்பகல் வரை

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

தன ஸ்தானத்தில், குரு பகவான் சுபபலம் பெற்று நிலைகொண்டுள்ளதால், வருமானம் திருப்திகரமாக இருக்கும். சனி பகவான் வக்கிர கதியில் சென்றதால், ஏற்பட்ட சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஏழரைச் சனி ஆரம்பமாகியுள்ளது. ஜென்ம ராசியில், ராகுவும் அமர்ந்திருக்கிறார். ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும்.

 தைமாத ராசிபலன்

தை மாதம் 4ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருக்கிறார். அதன்பிறகு, அவரால் நன்மை எதுவும் கிடைக்காது. நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை பாதிக்கப்படும். வாகனங்களை ஓட்டும்போது, நிதானமாகவும், கவனமாகவும் இருத்தல் அவசியம். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், நல்ல வரன் அமையும்.

பலன் தரும் பரிகாரம்

12சனிக்கிழமைகள் திருக்கோயில் ஒன்றில்மாலையில் தீபத்தில் சிறிது எள்எண்ணெய் சேர்த்து வந்தால், ஏழரைச் சனியின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.

பலன் தரும் தினங்கள்

தை: 1,4-6,11-17,21-23,27,28

சந்திராஷ்டம தினங்கள்

தை :18 பிற்பகல் முதல் 20 இரவு வரை

Leave a Comment

error: Content is protected !!