கிரகங்களின் பார்வை பலன்கள்
கிரகங்கள் ஒன்றுக்கொன்று 7 ஆம் வீட்டில் இருக்கும்போது பரஸ்பர பார்வை வீசும், செவ்வாய்க்கு 4 இல் சனி இருந்தால் பரஸ்பர பார்வை வீசும்.
சூரியன் பார்வை பலன்
சூரியன், சந்திரன் ஒன்றுக்கொன்று 7 இல் இருந்தால் பவுர்ணமி யோகம் கெட்ட சிந்தனையற்றவர். வெளிப்படையான பேச்சுள்ளவர்,
சூரியன், செவ்வாய் ஏழுக்கு ஏழில் இருந்தால் பவர்ஸ்டேஷன் அதிகாரியாவார். மணவாழ்வு சுகம்தராது. வேடுவர்கள் காகத்தை உண்பார்கள்.
சூரியன் புதன் பரஸ்பர பார்வை பெறாது. புதன் சூரியனுக்கு முன்னும், பின்னும் சூரியனுடனுமே பயணம் செய்யும்.
சூரியன், குரு பரஸ்பர பார்வை இருந்தால் வேளாண்மைத் துறை அலுவலகராவார் நூலகராவார்.
சூரியன், சுக்கிரன் பரஸ்பர பார்வை பணமுதலை, லஞ்சம் வாங்குவார்.
சூரியன், சனி பரஸ்பர பார்வை பக்தி நெறியாளர். சிலர் கள்வராய் இருப்பர்.
சூரியனுக்கு ஏழில் இராகு (அல்லது) கேது ஆட்டோ, வாடகை வண்டி ஓட்டுதல், டயர் வல்கனைசிங், பிளிச்சிங் பவுடர் வாணிபம்
சந்திரன் பார்வை பலன்
சந்திரன், செவ்வாய் பரஸ்பரபார்வை பெறின்: சந்திர மங்கள் யோகம் கால்வாய் வெட்டுதல், தந்தை வீட்டில் வாடகை வசூல் செய்வார்
சந்திரன், புதன் பரஸ்பரபார்வை குழல் விளக்கு தயாரித்தல், பால் வாணிகம்
சந்திரன், குரு: குருச்சந்திர யோகம்.
சந்திரன், சுக்கிரன்: குடிகாரர், தீயோர் சேர்க்கை.
சந்திரன், சனி: திட்ட அதிகாரி, மொழியதிகாரி.
சந்திரன், இராகு: இரவு நேரக் காவலர். கருவூலக் காவலர்.
சந்திரன், கேது: மயானக் காவலர்.
செவ்வாய் பார்வை பலன்
செவ்வாய், புதன் பரஸ்பர பார்வை: பறவை வார்த்தல் பொருளாதாரத் துறை வல்லுநர்,
செவ்வாய், குரு குருமங்கள யோகம்
செவ்வாய், சுக்கிரன்: பெண்மகவு தவறான வழியில் சென்றுவிடும்.
செவ்வாய், சனி: தீ விபத்தை உண்டாக்கும்
செவ்வாய், இராகு (அ) கேது: நிலக்கரி, வைரச் சுரங்கப் பணி.
புதன் பார்வை பலன்
புதன், குரு பரஸ்பர பார்வை: தீர்ப்பு மன்ற (ட்ரீபுனல்) அதிகாரி, பவாலிப் பணி, சர்பத் கடை வைத்திருப்பார்.
புதன், சுக்கிரன் ஏழாம் வீடு பார்வை தோட்டக்கலை வல்லுநர்,
புதன், சனி: செய்தி தொடர்பாளர், தூதரகப்பணி,
புதன், இராகு : பணமுடை உள்ளவர்.
புதன், கேது கோவிலில் சமையல்காரர், குருக்களாவார்..
குரு பார்வை பலன்
குருவும் சுக்கிரனும் ஏழுவீடு தள்ளியிருந்தால் டீம்டு கலெக்டர், டெபுடி கலெக்டர்.
குரு, சனி பரஸ்பர பார்வை: உறவினருள் யாராவது தொலைந்திருப்பார்.
குரு+சனி ஓர் இராசியில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரும். 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏழு வீடுகள் கணக்கில் பரஸ்பர பார்வை பெறும்.
குரு, இராகு (அல்லது) கேது: மாமா, சிற்றப்பாவழி இலாபம்,
சுக்ரன் பார்வை பலன்
சுக்கிரன்,இராகு, கேது : மாமா, சிற்றப்பா வீட்டு செல்வம் சேரும்.
சுக்கிரனும் குருவும் ஏழுவீடு தள்ளியிருந்தால் டீம்டு கலெக்டர், டெபுடி கலெக்டர்.
சனி பார்வை பலன்
சனி: சனி, இராகு (அ) கேது பரஸ்பர பார்வை: பணமுடை
இராகு-கேது எப்போதும் ஏழு வீட்டில் அமையும்.