Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள்-துலாம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள்-துலாம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள்-துலாம்

அநியாயங்களை தட்டிக் கேட்கும் வல்லமை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!!!

 சனிபகவான் இப்போது 27. 12. 2020 முதல் 19. 12. 2023 வரை சுக வீடான 4-ஆம் வீட்டில் அமர்வதால். அலைச்சல் இருக்கும், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். 
  • சொந்த ஊரை விட்டு இடம்பெயர் வீர்கள்
  •  செலவுகள் அதிகரிக்கும் 
  • மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம் 
  • வீடு வாங்குவதும்  கட்டுவதும் இழுபறியாக  முடியும்
  •  கடன் வாங்குவதை தவிர்க்கவும் 
  • சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது 
  • அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம் 
  • இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை 
  • ஆபரணங்களை இரவல் தரவும்  வேண்டாம் பெறவும் வேண்டாம் 
  • தாய்வழி சொத்துக்களில் சிக்கல் எழலாம் 
  • அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம் 
  • வழக்கில் தீர்ப்பு தாமதமாகும் 
  • அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும் 
  • பிள்ளைகளின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்

சனி  பகவானின் பார்வை 

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் 
  • சோர்வு, களைப்பு வந்து நீங்கும் 
  • அவ்வப்போது கோபப்படுவீர்கள் 

சனிபகவான் உங்களின் ஆறாம் வீட்டை பார்ப்பதால் 

  • பண வரவு அதிகரிக்கும் 
  • பழைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் 
  • நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் 

சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் 

  • உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் 
  • புதிய பொறுப்புகளும் உங்களை நம்பித் தரப்படும் 
இல்லத்தரசிகளே !!!
  • உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காதீர்கள் 
  • நகை சேரும் 
  • அலுவலகம் செல்லும் பெண்கள் சக ஊழியர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள்    
வியாபாரிகளே !!!
  • வியாபாரிகளுக்கு போட்டிகள் அதிகரிக்கும் 
  • மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம் அ
  • யல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும் 
  • பங்குதாரர்கள் இடையே அவ்
  • வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவர் 
  • கணினி,எலெட்ரானிஸ்,  மூலிகை வகைகளால் ஆதாயமடைவீர்கள்

 உத்தியோகஸ்தர்களே!!!

  •  சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள் 
  • பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள் 
  • மேலதிகாரியுடன் பிரச்சனை வேண்டாம் 
  • அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம் 
  • சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும் 
  • சிலர் உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள் 
  • கடின உழைப்பால் பதவி உயர்வு சம்பள உயர்வு பெறுவீர்கள் 
  • கணினித் துறையினருக்கு பார்வைக்கோளாறு, தசை பிடிப்பு நீங்கும் 
  • புதிய சலுகைகள் கிடைக்கும்

 பரிகாரம் 

சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதால் பன்மடங்கு பலன் கிடைக்கும். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பொருளாதார உதவி செய்யுங்கள் மகிழ்ச்சி பெருகும்
சனி பெயர்ச்சி பலன்கள்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!