லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
நீச்சம் பெற்ற கிரக பலன்
- லக்னத்தில் ஒரு கிரகம் நீச்சமானால் பைத்தியம் பிடிக்கும் குழப்பம் உண்டு.
- லக்னத்துக்கு 2 இல் கிரகம் நீச்சமானால் டான்சில் உபாதை உண்டு. தாழ்ந்த மக்கள் நடுவில் வசிப்பர்.
- 3 இல் கிரகம் நீச்சமானால் கணவர் / மனைவிக்குத் துரோகம் செய்வர். திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். சகோதரப் பிரிவு உண்டு.
- 4 இல் ஒரு கிரகம் நீச்சமானால் வாகன விபத்து 4 ஆம் தெசையில்) உண்டு. தாயார் பிரிவு உண்டு. (அம்சத்தில்) அதே கிரகம் உச்சம் வர்கோத்தமமானால் தாயாருக்கு நலமுண்டு,
- 5 இல் ஒரு கிரகம் நீச்சமானால் புத்திர சோகமுண்டு,
- லக்னத்துக்கு 6 இல் ஒரு கிரகம் நீச்சமானால் கடனுபாதை பெருகும். பேசினாலே சண்டை வரும்.
- 7இல் ஒரு கீரகம் நீச்சமானல் காமுகர்களாய் இருப்பர். நீச்ச இன மக்களிடம் கலந்துறவாடுவார்.
- 8 இல் ஒரு கிரகம் நீச்சமானால் சூரியன் இருந்தால் நெருப்பினும் சந்திரன் இருந்தால் நீரினும், செவ்வாயானால் ஆயுதத்திலும், புதனானால் பசியாலும், குருவானால் மலைமீது ஏறி விழுந்தும். சுக்கிரனானால் மனப்பிரமையானும், சனியானால் கள்வராலும், இராகுவானால் மருந்தாலும்,கேதுவானால் மாந்திரீகத்தாலும் உயிர் பிரியும்.
- 9 இல் கிரகம் நீச்சமானல் தந்தைவழி சொத்து கிட்டாது தந்தை தேசாந்திரியாக அலைவார்.
- 10-இல் கிரகம் நீச்சமானால் தொழிற்சங்கத் தலைவர்
- லக்னத்துக்கு 11 இல் நீச்சமானால் பொருள் வரவும் உண்டு.
- 12 இல் கிரக நீச்சம் வீண் அலைச்சல், கால் வீக்கம் தரும்.
- லக்கினத்திற்கு 2 ஆம் அதிபதி 6 இல் நீச்சமானால் பிறவி ஊமை, 2 இலேயே நீச்சமானால் திக்குவாய் உண்டாகும். 3 இல் நீச்சமானால் அதிர்ச்சியில் ஊமையாவார்.
- இரு நீச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் உச்ச பலன் இரு உச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் நீச்ச பலனும் உண்டு.