திதி
திதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும்.
சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள்.
பவுர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள்.
சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை.
திதி என்ற சொல்லே பிறகு தேதி என்று பெயரானது.
அமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன.
இந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும். அவை :
1. பிரதமை,
2. துவிதியை,
3. திருதியை,
4. சதுர்த்தி,
5. பஞ்சமி,
6. சஷ்டி,
7. சப்தமி,
8. அஷ்டமி,
9. நவமி,
10. தசமி,
11. ஏகாதசி,
12. துவாதசி,
13. திரயோதசி
14. சதுர்த்தசி,
15. பவுர்ணமி (அ) அமாவாசை.
16 திதிகளில் பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் மட்டும் பெயர் உள்ளது.
மற்ற 28 திதிகளும் ஒன்று, இரண்டு என்ற வடமொழிச் சொற்களால் வழங்கப்படுகின்றன.
முழு நிலவு நாளை வட மொழியில் பெளர்ணமி என்கிறார்கள். புது நிலவு நாளை வட மொழியில் அம்மாவசியா என்று அழைக்கிறார்கள்.
புது நிலவில் நாள் துவங்கி முழு நிலவு வரை உள்ள 15 நாட்களை வளர்பிறை நாட்கள் (திதி) என்றும் முழு நிலவில் துவங்கி புது நிலவு நாள் வரை உள்ள 15 நாட்களை தேய்பிறை நாட்கள் (திதி) என்றும் அழைக்கிறார்கள்.
1. புது நிலவு மற்றும் முழு நிலவிற்கு அடுத்த நாளை பிரதமை என்று சொல்வார்கள். பிரதமை என்றால், PRIME, அதாவது முதன்மை என்று பொருள் படும். முதல் நாள். அவ்வளவு தான். Prime Minister – பிரதம மந்திரி என்ற வட மொழி சொல்லிற்கு முதன்மை அமைச்சர் என்று சொல்கிறோம் அல்லவா!
ஆக, தேய்பிறை பிரதமை என்றால், முழு நிலவிற்கு அடுத்த முதல் நாள்.
வளர்பிறை பிரதமை என்றால், புது நிலவிற்கு அடுத்த முதல் நாள்.
2. இரண்டாம் நாளை துவிதை என்று அழைக்கிறார்கள். துவி என்ற சமற்கிருத சொல்லிற்கு இரண்டு என்று பொருள்.
3. திரி என்றால் மூன்று என்று நமக்கு நன்றாக தெரியும். அது தான் திரிதியை ஆயிற்று. மூன்றாம் நாள்.
4. சதுரம் என்றால் நான்கு பக்கம் என்று பொருள் வருகிறதா. அது தான் சதுர்த்தி என்கிறார்கள். அதாவது நான்காம் நாள்.
5. பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் ஓடும் மாநிலம் என நமக்கு நன்றாக பள்ளிகளில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். பாஞ் என்றால் ஐந்து. பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்த ஸ்வரங்கள் என்று இசையில் குறிப்பிடுகிறார்களே? அதாவது ஏழு ஓசைகள் என்று. அது தான் சப்தமி என்றால் ஏழாம் நாள்.
8. அஷ்ட லட்சுமி, அஷ்ட கோணல் எல்லாம் கேள்வி பட்டிருப்பீர்கள். அஷ்ட என்றால் எட்டு. அது தான் அஷ்டமி என்றால் எட்டாம் நாள்.
9. நவ நாள் என்று இறை வழிபாட்டில் ஒன்பது நாட்கள் ஆலயம் வந்து வழிபடுவதை சொல்வார்கள். ஒன்பது கோள்களை, தமிழர் அல்லாதோர் நவ கிரகம் என்று சொல்ல கேட்டதில்லையா? நவமி என்றால் ஒன்பதாம் நாள்.
10. தச என்றால் பத்து. கமல் நடித்த தசாவதாரத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார் அல்லவா. ஆக தசமி என்றால் பத்தாம் நாள்.
11. ஏக் என்றால் ஒன்று. தஸ் என்றால் பத்து. ஆக ஏக்-தஸ் என்பது ஏகாதசி. அப்படியென்றால் அது பதினொன்றாம் நாள்.
12. துவி என்றால் சமற்கிருதத்தில் இரண்டு என பொருள். ஆகா துவி+தஸ் என்பது பன்னிரண்டாம் நாள் ஆகும்.
13. திரி+தஸ் = திரியோதசி. நீங்களே சொல்வீர்கள் அது பதிமூன்றாம் நாள் என்று.
14. சதுரம் என்றால் நான்கு. அதனுடம் இந்த தசி என்கிற தஸ் சேர்ந்து சதுர்த்தசி என்பதால் அது பதினான்காம் நாள்.
இவ்வளவு தான் இந்த திதி என்கிற நாட்களில் மறைந்துள்ள பெயர்களுக்கான விளக்கம்.
வளர்பிறை திதிகள் (அமாவாசைக்கு அடுத்த நாள் முதல்) 14 ஆகும்.
தேய்பிறை திதிகள் (பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல்) 14 ஆகும்.
அமாவாசை 1, பவுர்ணமி -1
ஆக மொத்த திதிகள் 30
பதினான்கு திதிகளில் அமாவாசைக்கு அடுத்த நாள் ஆரம்பித்து பவுர்ணமிக்கு முதல் நாள் முடியும் திதிகள் சுக்ல பட்ச திதிகள் அல்லது வளர்பிறை திதிகள் எனப்படும்.
பவுர்ணமிக்கு அடுத்த நாள் ஆரம்பித்து அமாவாசைக்கு முதல் நாள் முடியும் திதிகள் கிருஷ்ண பட்ச திதிகள் அல்லது தேய்பிறை திதிகள் எனப்படும்.
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266