அதிசயங்கள் நிறைந்த பழனி முருகன் கோவில் – தெய்வீக அனுபவத்தின் மையம்!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

பழனி மலை முருகன் அதிசய தகவல்கள்: 

  • முருக பெருமானின் அறு படை வீடுகளில் 3-வது படை வீடு,வீடும் ,ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் அதிசயங்கள்.
  • தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய்,பஞ்சாமிர்தம்,சந்தன்ம்,விபூதி)மட்டும்தான் உபயோகிக்கபடுகிறது.
  • மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகபடுத்தபடுகிறது.இவைகளில் சந்தனம் பன்னீர் தவிர மற்ற எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை)வைத்து, உடனே அகற்ற படுகிறது. அதாவது ,முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் .இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
  • ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷே அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடதிற்குள் முடிந்து விடும்.
  • அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால் ,பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சற்றுவதோ ,பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
  • இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாற்றப்படுகிறது .
  • விக்ரகத்தில் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்க படும் .முன்பு சந்தன காப்பை முகத்திலும் சாற்றிக்கொண்டு இருந்தனர்.பிறகு இந்த முறை மாற்ற பட்டது.
பழனி முருகன் கோவில்
  • விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும் .ஆதலால் இரவு முழுவதும் ,அந்த விகரகத்லிருந்து நீர் வெளிப்படும் .இந்த நீரை அபிஷேக தீர்தத்துடன் கலந்து ,காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருக்கிறார்கள்.
  • தண்டாயுதபாணி சிலையில் ,நெற்றியில் ருத்ராட்சம், கண், மூக்கு, வாய்,தோள் ,கை, விரல்கள், போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்க பட்டது போல் தெளிவாக இருக்கும்.
  • இது போகரின் கைவண்ணம் அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒருவிதவமான சுகந்த மனம் (இதுவரை ஒருபோதும் வெளியே உணர்ந்திராத )பரவி நிற்கும்.
  • இந்த சிலையை போகர் செய்து முடிக்க 9 வருடங்கள் ஆகியது.அம்பாள் ,முருகர்,அகத்தியர் இவர்களுடைய உத்தரவிற்கு  பின்புதான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்ததாகவும் ,இதற்கு 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து ,81சித்தார்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர்.போகர்,இக பரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ,முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார் .இதனால் ,மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குலதெய்வம் ஆனார்.
  • கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும் ,நவ்பாஷானத்தில் சிலை செய்த இந்த கோவில்  இன்றளவும் பிரசித்தி பெற்று இருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமைதான்.
  • தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது .அவரை தரிசிக்க வலது பக்கமாக சென்று ,தீபம் காட்டுதல் வேண்டும் .ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.
  • பழனியில் 2 மரகத லிங்கம் உள்ளது .ஒன்று முருகர் சன்னதியில்.இன்னொன்று போகர் சமாதியின் மேல் உள்ளது .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது….

முக்கிய தகவல்

பழனி முருகன் கோவில் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடம் ,நடை திறக்கும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள அரசு இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்

https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/eservices_search.php?activity=eservices&tid=32203

Leave a Comment

error: Content is protected !!