குரு-புதன் பரிவர்த்தனை
புதன் இல்லங்களில் குருவும் குருவின் இல்லங்களில் புதனும் இருக்கும் இந்த பரிவர்த்தனை நிலையானது சிறப்பை தர தவறுவதில்லை.
பல பாஷைகளில் தேர்ச்சி உயர்ந்த கல்வி சாதுர்யமான திறன் தொழில் வகையில் நூதனமான முயற்சிளை கையாண்டு வெற்றி பெறுவது , தன் குழந்தைகளில் கல்வியின் சிறப்பை கண்டு பெருமை அடைவது இல்லற வாழ்வில் நிலையறிந்து அதன்படி செயல்பட்டு சாதுர்யமாய் நடந்து கொள்வது, வாழ்க்கையில் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு வரும் ஒரு உன்னத சூழ்நிலையை உருவாக்குவது,அளவான குழந்தைகள் அடக்கமான செல்வாக்கு , அளவான செல்வம் தகுதிக்குட்பட்ட செயல்கள் ஆடம்பரமில்லாத பக்தி மார்க்கம் தாய் வழி சிறப்பு,அம்மான்வர்க்கத்தாரின் உயர்வு அவ்வகை சொத்துக்கள் கிடைத்து ஆதரவு கிடைத்தல் . இவர்கள் சொல்லும் செயலும் பாராட்டக்கூடியதாகவே இருக்கும் .
இவ்வகை உன்னதமான பரிவர்த்தனையானது நட்சத்திரங்களின் எதிரிடை தன்மை பெற்ற நட்சத்திரங்களில் அமைந்து விட்டால் பலன்கள் நேர்மாறாக செயல்படும்.
ரிஷப லக்கினத்திற்கு 2 , 11 , 5 , 11 பரிவர்த்தனம் சிம்மத்திற்கு 2 , 5 , 11 , 5 விருச்சிகத்திற்கு 2 , 11 , 5 , 11 கும்பத்திற்கு 2 , 5 , 5 , 11 பரிவர்த் தனங்கள் சிறப்பை தருகிறது.மற்ற லக்னங்களுக்கு அவ் வளவு சிறப்பை தருவதில்லை என்றாலும் மிகவும் பாதிப்பு களை உண்டாக்குவதில்லை.
புதன் , குரு என்ற சுபத்தன்மையானது இங்கு மேலோங்கி செயல்படுகிறது . இந்த குரு , புதன் ஐராவதம்சம் சரஸ்வதாம்சம் பர்வதாம்சம் , சூடாம்சம் பெற்று இருந்தால் உயர்ந்த சுபபலன்களை தருகிறது.
இவர்கள் எத்துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை ஓரளவாவது பெறுவார்கள் .
இந்த பரிவர்த்தனையில் செவ்வாய் ராகு உடன் இருப்பது அவ்வளவு விசேஷமாக செயல்படுவதில்லை .