Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்- 2020-2021-மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள்- 2020-2021-மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள்- 2020-2021-மகரம்

 
அனைவரையும் சமமாக மதிக்கும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே!!
 
குரு பகவான் 15. 11. 2020 முதல் 13.11.2021 வரை ஜென்ம குருவாக அமர்வதால் 
  • பொறுப்புகளும் வேலைச் சுமையும் அதிகரிக்கும் 
  • ஒரு தேடலும் ,நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும் 
  • அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள் 
  • அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம்
  •  வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது 
  •  குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்
  •   வீண் அவ நம்பிக்கை வந்து போகும்
  •    வீண் சந்தேகம் ஈகோப் பிரச்சினையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும் 
  •    சொந்தபந்தங்கள் உங்களின் தன்மானத்தை சீன்டும் விதம் நடந்துகொள்வார்கள் 
  •    பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகும் 
  •    புதிய நபர்களை நம்புவது கூடாது
  • காசோலை விஷயத்தில் கவனம் தேவை 
 

குரு பகவானின் பார்வை பலன்கள் 

  • குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டு 
  • பரம்பரை சொத்து பிரச்சனை தீரும்
  •  சிலர் பரம்பரை சொத்தில் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவார்கள் 
  •  தியானம் மற்றும் பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும் 
  •  மகளுக்கு நல்ல வரன் அமையும்
  •   குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும்
  •    கணவன் மனைவிக்குள் பாசம் குறையாது 
   

கும்பத்தில் குரு பகவான் 

  • 6.4.2021 முதல் 14. 9. 2021 வரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அதிசாரம் ஆகியும் வக்ரமாகி செல்வதால் 
  • எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் 
  • பிரச்சனையால் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்கள் 
  • பழைய கடனில் ஒரு பகுதி தீரும் 
  • குடும்பத்தில் திருமணம் சீமந்தம் நல்ல விதத்தில் முடியும் 
  • உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும் 
  • அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம் 
  • வேலையில் நீடிப்போமா மாட்டோமா என்ற சந்தேகம் தினமும்இருந்துகொண்டே இருக்கும்,
  •  எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது 
  •  பதவி உயர்வு, சலுகைகள் ,சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும்

பரிகாரம்:

திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருளும் ஸ்ரீ அக்னீஸ்வரரையும் ,ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் பூச நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். நல்லது நடக்கும்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!