சந்திர கிரகணம்
ஸ்வஸ்திஸ்ரீ மங்களரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 22ம் தேதி (8-11-2022)செவ்வாய் கிழமை பகல் 2:38மணி முதல் மாலை 6:19 மணி வரை பரணி நட்சத்திரத்தி நிகழும் ராகு கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் பகுதி கிரகணமாக இந்தியாவில் தெரியும்,.
கிரகண ஆரம்பம் :02:38:27PM
முழு கிரஹண ஆரம்பம் :03:45:30 PM
கிரஹண மத்தியமம் :04:28:54PM
முழு கிரஹண முடிவு :05:11:59PM
கிரஹண முடிவு :06:19:21PM
கிரஹண பரிமாணம்:1.3666
இந்த கிரகணம் முழு கிரகணமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் ஆரம்பிப்பதாலும் அப்போது இந்தியாவில் சந்திரன் தெரியாததாலும் இந்தியாவில் பகுதி கிரகணமாக சந்திரன் உதயமாகி கிரகணம் முடியும் வரை பார்க்கலாம்.
வெவ்வேறு ஊர்களுக்கு சந்திர உதய நேரங்கள்
சென்னை:5:38PM
சேலம்:5:49PM
கோவை:5:54PM
மும்பை:6:01PM
கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள்
அசுவினி,பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும். இன்று அந்தந்த ஊர் சந்திர உதயத்திற்கு பின் புண்ணிய காலம் ஆரம்பம்.காலை முதல் விரதம் இருந்து கிரகணம் முடிந்த பின் உணவு அருந்தவும் பௌர்ணமி சிரார்த்தம் அடுத்த நாள் செய்யவும்.