சனி பெயர்ச்சி 2023-நட்சத்திர பலன்கள்
சுவாதி நட்சத்திரம்
இந்த சனிப்பெயர்ச்சியில் உங்கள் மூளை, மனம், யோசனை, சிந்தனை என இவையெல் லாம் மிக வேகமாக செயலாற்றும். நல்ல காலத்திலேயே விபரீதமாக சிந்திப்பவர்கள், இப்போது கலையுலகில் யாரும் இதுவரை செய்யாத செயல்களைச் செய்வீர்கள் பங்கு வர்த்தகத்தைப் புரட்டிப்போடும் அளவிற்கு ஏதோவொன்றை செய்துவிடுவீர்கள். உங்கள் வாரிசுகளை கொண்டும் செய்யும் செயல்கள் அச்சம் கொள்ள செய்யும் சிலர் அது எதிர்மறையான, அதீத நம்பிக்கைகள் உங்களை வாழ வைக்கும். பிறரை மிரள செய்யும் ஏதோ ஒரு பெரிய வித்தியாசமான விஷயம் செய்வீர்கள்.
பைரவர் அல்லது மாரியம்மனை வணங்கவும்.
விசாக (1,2,3-ஆம் பாதம்)
வேலையில்லாமல் திரிந்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். திண்ணையில் இருந்தவருக்கு திடுக்கென்று ஒரு வேலை கிடைக்கும். ஏன் உங்கள் முன்னோர்களின் கோவிலில், ‘மணியடித்து பூஜை செய்’ என வருந்தி அழைப்பார்கள்.
நீதிமன்றம், மருத்துவமனை போன்றவற்றில் வேலை கிடைக்கும். ஆன்மிக சேனலில் முகம் காட்டலாம். வீடு மாறும்போது, அது பள்ளி அல்லது கோவில் அருகே அமையும்.
சிவனை வணங்கவும்.
விசாக (4-ஆம் பாதம்)
பணப்புழக்கம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துகொண்டே இருக்கும். அது வாரிசுகள்மூலம், புரோக்கர் கமிஷன்மூலம், வீடு, வாகன சம்பந்தம் என பணம் வந்துகொண்டே இருக்கும்.
இந்த சனிப்பெயர்ச்சியில் வாரிசுக்கு எதிர்கால நன்மைக்கான ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். பூர்வீக நிலம் நல்லதொகை ஈட்டித் தரும். குலதெய்வ சம்பந்தம் அதிகம் ஏற்படும். உங்களில் சிலர் பூர்வீக வீட்டிற்கு மாறுவீர்கள்.
சிவனை வணங்கவும்.
அனுஷ நட்சத்திரம்
ஒரு வீட்டைவிற்று வேறுவீடு வாங்குவீர்கள். மனையை விற்று வீட்டில் போடுவீர்கள் பள்ளி மாற்றம் உண்டு. வீடு மாறுவீர்கள். சிறுதூரப் பயண வாகனம் வாங்குவீர்கள். பத்திரிகை தொடர்பு கிடைக்கும். ஏதேனும்
கல்வி சம்பந்த பயிற்சி மேற்கொள்வீர்கள் நல்ல பணியாட்கள் அமைவர். சிறிய தோட்டம் அமைப்பீர்கள். மனதில் உறுதி, நம்பிக்கை தோன்றும்.
சனீஸ்வரரை வணங்கவும்.
கேட்டை நட்சத்திரம்
சிலருக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். அனாமத்து சொத்து கிடைக்கும் வாய்ப்புண்டு. சில அரசியல்வாதிகளின் பினாமியாகி, சிலபல சொத்துகள் உங்கள்வசம் வரும். அதுபோல ஒப்பந்த விஷயங்களை உங்களை கவனிக்கச் சொல்வர். ஆக, ஏதோ ஒருவிதத்தில், காசு செலவழிக்காமல், சொத்து கைக்கு வந்துவிடும். இருக்கு; ஆனா இல்லை’ என்ற கதைதான். அதனால் என்ன? கிடைத்தவரை லாபம் என்று அனுபவித்துவிடுங்கள். அப்புறம், கேட்கும்போது கொடுக்கவில்லை என்றால் பிரச்சினை வரும்; ஞாபகம் இருக்கட்டும்.
நாராயணரை வணங்கவும்.
உத்திராட (2, 3, 4-ஆம் பாதம்)
அரசுத் தொல்லையுண்டு, தந்தையின்மேல் கோபம் வரும் அளவுக்கு நிகழ்வுண்டு வீட்டில் சதா தந்தை- மகன் சண்டை இருந்து கொண்டே இருக்கும். சிலரின் அரசுப் பதவி கேள்விக்குறியாகும். சற்று பிடிவாதமாகி விடுவீர்கள். முன்கோபம் அதிகரிக்கும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் மீதுள்ள நிறைய பழிகளை நீக்கிவிடும். அதுபோல் சில நல்ல குணங்களும் நீர்த்துப் போகும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சனீஸ்வர வழிபாடு நன்று.
திருவோண நட்சத்திரம்
திருமணத்திற்கு வரன் தேர்ந்தெடுக்கத் திணறுவீர்கள். மாற்றி மாற்றி யோசிப்பீர்கள். திருமண செயல்பாடுகள், மண்டபம் போன்றவற்றிலும் நீங்களும் குழம்பி, குடும்பத்தினரையும் மண்டை காய வைத்துவிடுவீர்கள். வியாபாரத் திலும் ஸ்திரத்தன்மையின்றி இருப்பீர்கள். பார்ட்னர் ஓடி விடுவார்.
பண விஷயத்தில் கணக்கை சரியாகப் பராமரிக்காமல் குடும்பத்தில் எல்லாருடனும் சண்டை போடுவீர்கள் உங்களில் சிலருக்கு வாய்க்குழறல் ஏற்படும். திருமண வாழ்வை பத்திரமாக கவனமாகக் கொண்டு செல்லுங்கள்.
அம்பாளை வணங்கு வதும் தியானம் செய்வதும் நன்று.
அவிட்டம் (1,2-ஆம் பாதம்)
தாயார் நலனில் அக்கறை தேவை. பலவித பணவரவு உண்டு. பேச்சில் உஷ்ணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தன் பேச்சின் மூலம் உயர்வும் அடையலாம். தாழ்வும் உண்டாகலாம். இந்த நட்சத்திர அரசியல்வாதிகள் மட்டு மல்ல அனைவருமே உங்களின் நல்லது கெட்டது, உங்களது சொற்களாலேயே கட்ட மைத்துக் கொள்வீர்கள் பணவரவு மற்றும் அதன் பயனையும் உங்கள் செயல்களால் மேம்படுத்தியும் கொள்வீர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கியும் விடுவீர்கள் நன்றும் தீதும் பிறர் தர வாரா என இக்கால கட்டம் ஓடும்.
பைரவரை வணங்கவும்.
அவிட்ட நட்சத்திரம்
தொழில் மாற்றம், இடம் மாற்ற குத்தகை
மாறுதல், கைபேசி மாற்றுவது என ஏதோ ஒன்றின் மாற்றம் மாறாமல் இருக்கும். எனவே மாற்றங்களை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். வீடு கண்டிப்பாக மாறவேண்டி இருக்கும். அதனால் முதலிலேயே உங்கள் வாழ்நிலை சூழலுக்கு ஏற்றவாறு நல்ல வீடாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வீடு, தொழில் மாறுவதிலேயே இந்த சனிப்பெயர்ச்சி ஓடி விடும். இது எல்லாருக்குமான அவிட்டதிற்கான முக்கிய விஷயமாகும்.
செவ்வாய்க் கிழமை தோறும் சனீஸ்வரரை வழிபடுங்கள் அர்ச்சகருக்கு,தீப்பெட்டி, நல்லெண்ணெய் வாங்கிக்கொடுங்கள்.
சதய நட்சத்திரம்
இந்த சதய நட்சத்திரத்திற்கு பலன் சொல்வதை விட, அவர்களை சுற்றியுள்ள குடும்பத்தினர் நண்பர்களுக்கு பலன் சொல்வதுதான் சரியாக இருக்கும். பாடாய்ப்படுத்தி விடுவார்கள். வெய்யிலில் போட்டால் காயமாட்டேன் என்பர். தண்ணீரில் போட்டால் நனைய மாட்டேன் என்பர். குளிரில் போட்டால் வேர்க்கிறது என்பர். காற்றில் பறக்கவிட்டால் புழுங்குகிறது என்பர். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் சுற்றியுள்ளவர்கள் திணறிப்போவர்.
இவர்களில் சிலர் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டு பிறர் பிராணனை வாங்குவர் சிலர் சிறையில் போய் குத்த வைத்து வீட்டினர் மானத்தை வாங்குவர். சிலர் குடியும் கூத்தியுமாக ஜாலியாகவே இருப்பர். சுற்றியுள்ளவர்களை கடவுள்தான் ரட்சிக்கவேண்டும் குடும்பத்தினர் எத்துணை பைரவரை வணக்கமுடியுமோ அத்துணை வணங்குங்கள்.
பூரட்டாதி (1, 2, 3-ஆம் பாதம்)
உங்களின் மூத்த சகோதரர் இட மாற்றம் பெறுவார். அரசியல்வாதிகள் பணம் விஷயமாக அடுத்த கட்சிக்கு செல்வர் பணம் மற்றும் பதவி உயர்வின் பொருட்டு அதிகம் அலையவேண்டி யிருக்கும். சிலருக்கு உயர் பதவி என்பது நிறைய செலவு செய்வதால் மட்டுமே கிடைக்கக் கூடியதாக அமையும். குடும்பத்திலுள்ள ஒருவரின் மறுமணம் பொருட்டு தேடுதல் அதிகமிருக்கும். சமையல் கலைஞர்கள் பரபரப்பாவார்கள். வாழ்வு முன்னேற்றம் அலைச்சல்களுடன் கிடைக்கும். காசு லாபம் செலவுக்குப் பிறகு வரும். தெய்வீக தரிசனத்திற்கு வெகுதூரம் பயணம் மேற்கொள்வீர்கள். குருக்களின் சமாதிகளை வாங்குவீர்கள்.
சிவன் மற்றும் காஞ்சி மாமுனிவர், ஸ்ரீராகவேந் திரர், சீரடி சாய்பாபா இவர்களை வணங்கவும்.
பூரட்டாதி (4-ஆம் பாதம்)
உங்களில் சிலருக்கு கோவில் நீதிமன்றம், குல்வித்துறை நிர்வாகம் வங்கி, ஜோதிடப் பத்திரிகை என இவை சார்ந்த வேலை கிடைக்கும் அல்லது தொழிலில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு வேலையில். எல்வியில் சோமுடியும் சில அர்ச்சகர்கள் வெளிநாடு சென்று ஆன்மிகப் பணி செய்வர் அலைச்சல். விரயம் இருப்பினும் அது நர்ம, தெய்வ சம்பந்தமாகவே அமையும்
சித்தர்களை வழிபடவும்
உத்திரட்டாதி
லாபத்தில் நஷ்டம், நஷ்டத்தில் லாபம் என கலந்தடித்து வாழ்க்கை அமையும், சில செயல்கள்; நீங்கள் எதிர்பார்த்தது நடக்காது. ஆனால் சில எதிர்பார்க்காது நடக்கும் இந்த சனிப்பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் ஏற்று கண்ணாமூச்சி ஆட்டமாகும் ஓஹோவென்று இருந்த உயர் பதவியில் உள்ளவர்கள் காணாமல் போய்விடுவர் ஒன்றுமே இல்லாமல் இருந்தவர்கள் முன்னிலைக்கு வந்துவிடுவர். ‘திண்ணையில் இருந்தவனுக்கு திடுக்குன்னு கல்யாணம்’ என, ஏறுக்குமாறாக விஷயங்கள் நடக்கும்.
சனீஸ்வரரை வணங்கவும்.