சனி பெயர்ச்சி பலன்கள்-கிருத்திகை நட்சத்திரம்
இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் உங்களுக்கும், உங்கள் தகப்பனாருக்கும் ஆகவே ஆகாது. சதா சண்டை வந்து கொண்டே இருக்கும். வேறு சிலருக்கு மருமகன், மருமகளோடு மல்லுக்கட்டவே பொழுது சரியாகப் போகும்.
உடல் நலனைப் பேணுகிறேன் என்று, சிலபல உடற்பயிற்சி, தியானம் என செய்து, அது சில இம்சையை இழுத்துக் கொண்டு வரும். உங்களின் ஈகோ அடிவாங்கி, நெளிந்து, நசுங்கிப் போய்விடும்.
Also Read
ரியல் எஸ்டேட், பூமி, வாகனம் சார்ந்த தொழில் உடையவர்கள் மேன்மை அடைந்தாலும் கூடவே வில்லங்கமும் வந்து கொண்டிருக்கும். அது அரசு, அரசியல் தொல்லையாக அமையும். சிலர் வீடு கட்டுவீர்கள் கிணறு தோண்டுவீர்கள். மிகச்சிலருக்கு கல்வி சார்ந்த அரசு பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது
சனி, சூரிய சாரம் பெற்ற கிருத்திகையைப் பார்ப்பதால், இவ்விதம் மனத்தடைகள் ஏற்படும்.
பலன் தரும் பரிகாரம்
Also Read
- மலை மீதுள்ள முருகரை வணங்கவும்.
- ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.






