சிதம்பர ரகசியங்கள் !!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சிதம்பர ரகசியங்கள்:
Chidambaram Secrets

சிதம்பரத்தில்  எல்லோரும் அறிய துடிக்கும் மர்மம்.அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்த கோவிலில்?…அறிவியல் ,பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவயியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள் மட்டும்மல்லாமல்  இவற்றை எல்லாம் தாண்டி அக்கோவிலில் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புத ரகசியங்கள் இதோ….
 
பூமத்திய ரேகையின் மையம்(The center of the equator)
ஒட்டு மொத்த உலகத்தின் மைய புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி இடத்தில் அமைந்துள்ளது.
 
உச்ச கட்ட அதிசயம்(The peak phase miracle)
பஞ்ச பூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம் ,நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஷ்வரர் ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 degrees,41minutues east தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது..
 
மனித தோற்றம்( Human origin)
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்க பட்டு இருக்கும் சிதம்பரம் கோவில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயிகளை குறிக்கிறது.
 
மூச்சு காற்றை குறிக்கிறது(Breathing refers to air)
விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்க தகடுகளை கொண்டு செய்ய பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சாரா சரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது.
 
நாடிகள்(Arteriology)
இந்த 21600 தகடுகளை வேய 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது .இந்த 72000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்பவையும் அடங்கும் ..
 
ஐந்து படிகள்(FiveSteps): 
பொன்னம்பலம் சற்று இடது புறமாக அமைக்கபட்டுள்ளது .இது நம் உடலின் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய 5 படிகளை எற வேண்டும் .இந்த படிகளை பஞ்சாட்சர படி என்று அழைக்கப்படுகிறது. அதாவது சி,வா,ய, ந,ம  என்ற 5 எழுத்தே ஆகும் .
Chidambaram Secrets
 
4வேதங்கள்(4 Vedas)
கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது .இந்த கனகசபையை தங்க 4 தூண்கள் உள்ளன .இது 4 வேதங்களை குறிக்கிறது.
 
ஆயகலைகள்
பொன்னம்பலதில் 28 தூண்கள் உள்ளன ,இவை 28 ஆகமங்களையும் ,சிவனை வழிபட்டும் 28 வழிகளை குறிக்கின்றது .இந்த 28 தூண்களும் 64,10,64 மேற்பலகைகளை கொண்டுள்ளது ,இது 64 கலைகளை குறிக்கிறது .இதன் குருக்கில் செல்லும் பலகைகள் ,மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கிறது.
 
பொற்கூரை
பொற் கூரையின் மேல் இருக்கும்9 கலசங்கள் ,9பவகையான சக்தியை குறிக்கின்றது .அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் ,6 சாஸ்திரங்களையும் ,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தின்  18தூண்கள்  ,18 புரணங்களையும் குறிக்கிறது.
 
தாண்டவம்
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டு இருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலத்தில் கால் பெருவிரல் இருப்பது பூமியின் ஈர்ப்பு மையத்தில் உள்ளது.
 
தீர்த்தங்கள்
சிவகங்கை, பராமனந்த கூபம், வியாகிரபாத தீர்த்தம்,அனந்த தீர்த்தம்,நாகசேரி பிரம்ம தீர்த்தம், சிவபிரியை ,புலிமேடு ,குய்ய தீர்த்தம் ,திருப்பாற்கடல் ஆகிய தீர்தங்கள் கோவிலில் அமைந்துள்ளன.
 
கோபுரங்கள்(Towers)
இக்கோவிலில் 4 ராஜ கோபுரங்கள் உள்ளன.. இவை ஏழு நிலைகளை கொண்டவையாகும்..இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவ தாண்டவங்களுக்கான சிற்பங்கள் காணபடுகிறது..

Leave a Comment

error: Content is protected !!