சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
உறவில் திருமணம் இல்லை.
ஆனால் மிகவும் அன்னி யோன்னியமான இடத்தில் திருமணம் நடக்கும்.
சில எதிர்பாராத மாறுதல்கள் குடும்பத்தில் திடீரென தோன்றும். பிரச்சினைகளால் கணவன் அல்லது மனைவி பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
7-க்குடைய சனி,6ல் ராகு-கேது-சுக்கிரன் போன்றவர்களுடன் சேர்க்கை பெற்று,7-மிடத்திற்கு சுபர் பார்வை இல்லாவிட்டால் ,தான் விரும்பிய அன்னிய மதத்தில் உள்ள ஆண் அல்லது பெண் வாழ்க்கை துணையாக அமையும்.
2-மிடத்தை சனியோ, குரு-சுக்கிரன் பார்த்தாலோ சேர்ந்தாலோ கெடுதி இல்லை.
சுக்கிரன் தனித்து இருந்தால் திருமணத்திற்கு முன்பே ஆண் அல்லது பெண்ணுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு நீங்கி வேறு ஆண் அல்லது பெண் வாழ்க்கை துணையாக அமையும்.
சிலருக்கு பெண் வாரிசு அதிகமாகவும்-சிலருக்கு பெண் வாரிசே இல்லாமலும் போகலாம்.
புத்திர புத்திரிகளால் ஏதாவது தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.
இல்லற வாழ்வில் வேறு பெண்களையும் தன் மனைவியாக்கும் நிலை ஏற்படலாம்.
இதை அறியும் மனைவி ஜாதகருக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி.
ஆனால் அவளுக்கு தொல்லை ஏற்பட்டால் ராக்ஷஷி போன்று ஆடி விடுவாள் எச்சரிக்கை..
புதன்-சனி-குரு தசா புத்தி அந்தர காலங்களில் கிழக்கு-தெற்கு திசையிலிருந்து வரன் அமையும்.
2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.பெரும்பாலும் ஏதாவது ஆலயங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
சனியின் பார்வை சூரியனுக்கு விழுந்தால் ஏற்க்கனவே நிச்சயிக்கபட்ட பெண் தவறி வேறு பெண் மனைவியாக வருவாள்.
இவர்கள் திருமணம் தாய் ,தந்தை பார்த்து முடிவு செய்ததாக இருக்காது.
தாய் வழி உறவினர்கள் பார்த்து செய்ததாக இருக்கும்.
இவர்கள் எதிர்பார்த்த நிறம்-குணம் கிட்டாது. ஆகவே மனைவியை அனுசரித்து போக வேண்டி வரும்.
வரும் மனைவி வகையில் இருந்து பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.
இவர்களுக்கு சற்று வசதி குறைவான பெண் அமைவது சிறப்பாகும்.