சுக்கிர பகவானும் -திருமணமும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சுக்கிர பகவானும் -திருமணமும்

லக்கினத்திற்கு 7-ல் சுக்கிரன்

  • லக்கினத்திற்கு 7 – ல் சுக்கிரன் இருந்தால் இவர் இங்கு இருப்பது கணவன் மனைவிக்கு ஆபத்து அடிக்கடி வரும்.
  • இல்லற சுகம் பூர்ணமாகக் கிடைப்பது அரிது.
  • இருந்தாலும் நல்ல அழகன்.
  • சொத்து சேர்க்கை ஏற்படலாம். ஆனால் தீயவர் நட்பு , தீய குணம் , கீழ்த்தரமான எண்ணங்கள் நிரம்பி இருக்கும்.
  • 7 – ம் இடம் விருச்சிக ராசியாக இருந்தால் மனைவி க்கு அபாயம் உண்டாகும்.
  • கேது சேர்க்கை இருப்பின் சதா நோய்த் தொல்லை உண்டு.
  • கணவன் மனைவி பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு . அனு சரித்துப் போகவும்.
  • பணக்கார மனைவியாகவும் செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவளாக அமைவாள்.
  • 14-17 வயதிற்குள்ளாகவே , பெண் மோகம் ஏற்பட்டு விடும்.
  • மனைவி இருந்தாலும் பிற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல் , விரைவில் மனைவியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
  • பிறர் மனைவியுடன் உறவு கொண்டு , அதனால் பொருள் சேரும் வாய்ப்பும் உண்டு .
  • அதி காலையில் சம்போகம் செய்வதில் விருப்பம் உடையவர்.
  • காமத் தினால் பொருள் விரையம் , அழகுள்ள மனைவியானாலும் அவளை வெறுப்பார்
  • கொடுமை பேசி நேசம் கொள்வான்.
சுக்கிர பகவானும் -திருமணமும்
  • ஊனம் அடைந்திருந்தாலும் , பெண்களின் மனதைக் கவரும்படியான அழகுள்ளவன்.
  • இவரது தசாபுத்தியில் களத்திர நாசம் அல்லது பிரிவினை , மேகநோய் ஏற்படலாம். இழக்கப்பட்டதை மீண்டும் பலனாகக் கொள்வான்.
  • ராகு கூடிடில் வம்புக்காரி , வாயாடி , அகங்கார குணம் உள்ள மனைவி அமைவாள்.
  • கேது கூடிடில் பிறர் மனைவியை விரும்புவான்.
  • சனியுடன் கூடிடில் அழகற்ற பெண்ணுக்கு கணவனாக அமைவான்.
  • கன்னி ராசியில் இருப்பின் மனைவிக்கு ஜல கண்டம் உண்டு.
  • நல்ல உடற்கட்டுள்ள ஆரோக்கிய மனைவியைப் பெறுவான்.
  • பெண்களை திருமணம் செய்து கொள்வதை ஒரு பொழுது போக்காகக் கொள்வார் . தினசரி உடையை மாற்றுவதைப் போல் துர்நடத்தை உள்ள பெண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
  • சங்கீத ஞானத்தால் பலரை மடக்குவார்.
  • கலைத்துறையில் ஈடுபட்டு படாத பாடுபடுவார்.
  • கன்னிப் பெண்களின் மடியில் படுப்பது என்றால் ஏகக் குஷி.
  • மனைவி வரும் திக்கு-தென் கிழக்கு மூலை
  • மனைவியின் குணம் : கவர்ச்சி , சிற்றின்ப விரும்பி .
  • மனைவியின் நிறம் -வெண்மை
  • மனைவி வரும் தூரம் -சுமார் பத்து மைலுக்குள்
  • கணவன் அல்லது மனைவியின் தொழில் : நீர் சம்பந்தப் பட்ட ஸ்துக்கள் , வியாபாரி , தங்கம் ,வெள்ளி தொழில்-கலைத்தொழில், உணவு விடுதி,ஆடம்பர பொருள்கள் சம்பந்தப்பட்ட தொழில்.

Leave a Comment

error: Content is protected !!