Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-சிம்மம்

சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-சிம்மம்

சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-சிம்மம் 

ஆத்மகாரகனாகிய சூரியனை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!!

இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 9, 3மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சனிபகவான் சித்திரை 16ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை அதிசாரமாக தை மாதம் 3 ஆம் தேதி முதல் வருடம் முடிவு வரை நேர்கதியில் உங்கள் ராசிக்கு 7-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
ஆனி மாதம் 28ஆம் தேதி முதல் தை மாதம் 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை திருஷ்டி தோஷத்தினால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.
  • தெய்வஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தாலும் எளிதாக தெய்வ தரிசனம் கிடைக்காது. பிரயாணங்களில் தடை ஏற்படும்.
  • தொழில்துறையில் பண வருவாயில் தேக்க நிலை ஏற்படும்.
  • செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காது.
  • உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் பெறுவார்கள்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தொழில்துறையில் பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும்.
  • போட்டியில் வெற்றி கிடைக்கும்.
  • தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கும்.
  • அலைச்சலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
  • கிடைத்த தொகையை தக்க வைத்துக் கொள்ளவும், வேறு வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை விட கூடாது.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலத்தில் தொழில் கூட்டாளிகளுடன் விரோதம் பாராட்ட கூடாது.
  • கணவன் மனைவிக்குள் சலசலப்பு ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க கூடாது.
  • உங்கள் செயல்பாட்டை வெளியில் சொல்லாதீர்கள்.
  • வெளியில் சொல்லும் விஷயங்கள் நிறைவேறாது.
  • மாணவர்கள் கவனத்துடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும்.
சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022
பரிகாரம் 

வருட ஆரம்பத்திலேயே ஒருமுறை வீட்டில் கணபதி,நவக்கிரக சுதர்சன ஹோமம் செய்யவும்.

பிரதி வியாழக்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!