Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம்

சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம்

சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம் 

இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.

ராகுவும் கேதுவும் முறையே 3,9 இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சித்திரை 16 ஆம் தேதி முதல் ஆனி 28ம் தேதி வரை அதிசாரமாகவும். தை மாதம் 3ம் தேதி முதல் நேர்கதியில் சனி பகவான் உங்கள் ராசியில் ஜென்ம சனியாக சஞ்சாரம் செய்கிறார் .ஆனி 28ம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடம் விரய சனியாக சஞ்சாரம் செய்கிறார்.
  • சித்திரை மாதம்முதல் ஆடி மாதம்வரை தொழில் விருத்தி காரணமாகவும், வீட்டில் சுபகாரியங்கள் காரணமாகவும் அலைச்சல் ஏற்படும்.
  • தொழில் துறையில் நல்ல வளர்ச்சி உண்டு.
  • வேலை மிக அதிகமாக இருக்கும் அதற்குரிய பணவரவும் உண்டு.
  • உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு.
  • ஆரோக்கியம் சீராக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு கடும் முயற்சியின் காரணமாக திருமணம் நடக்கும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
  • ஆடி முதல் மார்கழி மாதம் வரை குடும்பத்தில் வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் வாங்குவது விஷயமாக சுப விரயங்கள் ஏற்படும்.
  • பழைய வாகனத்தை மாற்றி புது வாகனத்தை வாங்கிக்கொள்ளலாம்.
  • தொழில் அலைச்சல் காரணமாக தூக்கம் குறையும்.
  • உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் ஏற்படும்.
  • தை மாதம் முதல் வருடம் முடிவு வரை குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
  • திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கைகூடும்.
  • பெரிய மனிதர்கள் நட்பு ஏற்படும். படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.
சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம்
பலன் தரும் பரிகாரம் 

ஒரு முறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வாருங்கள் நன்மை கிட்டும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!