சுபகிருது வருட பலன்கள்-2022-மகரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சுபகிருது வருட பலன்கள்-2022-மகரம் 

சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!!

இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.

சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி மாதம் 28ஆம் தேதி வரையில் அதிசாரத்திலும், தை மாதம் 3-ஆம் தேதி முதல் நேர்கதியிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.

ராகு கேதுக்கள் முறையே 4, 10-ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சுபகிருது வருட பலன்கள்-2022
  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். மன பாரம் குறையும். தூக்கமின்மை குறையும்.
  • தொழில் துறையில் இருந்த பிரச்சினைகளும் குறையும்.
  • தைரியமாக எதையும் செய்து வெற்றி கொள்ளும் நேரமிது.
  • அலைச்சல் வெகுவாக குறையும்.
  • வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடு மாறக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
  • மாணவர்கள் கடும் முயற்சி செய்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை எந்த காரியத்தை தொடங்கினாலும் முதலில் தடை ஏற்பட்டு பிறகு நிறைவேறும்.
  • குடும்ப சூழ்நிலை அமைதியாக இருக்கும்.
  • ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. தொழில்துறையில் கடுமையாக உழைத்து குறைவான பலன்களை பெறுவார்கள்.
  • உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
  • தை மாதம் முதல் வருடம் முடியும் வரை தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அதில் நல்ல பலனும் கிடைக்கும்.
  • உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் குறையும். பழைய வாகனங்களை விற்று புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
  • நண்பர்கள் உறவினர்கள் உதவி செய்வார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
லன் தரும் பரிகாரம் 

சனிக்கிழமைதோரும் சனி பகவானுக்கு எள் தீபமும்,ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வர கெட்டது விலகும்.தொட்டது துலங்கும்.

Leave a Comment

error: Content is protected !!