ஜோதிட ரீதியில் சொத்து பிரச்சினைகளை தரும் கிரக அமைப்புகள்…

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR


ஜோதிட ரீதியில் சொத்து பிரச்சினைகளை தரும் கிரக அமைப்புகள்
  • 2-க்கு அதிபதியும் 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றி குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியில்லை என்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும்
  •  4-க்கு உரிய கிரகம் நீசம் அடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேர வேண்டிய வாகனம், வீடு ,நிலம் ,பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படும்
  • 2-ம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில்பிரச்சினைகள் உண்டாகும்
  • 2-ல் நீச செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும்
  • ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2-க்கு அதிபதியாகி பலவீனமாக இருந்தால் நோயின் காரணமாக சொத்தை இழக்க வேண்டிய சூழல் உண்டாகும்
  • ஜாதகத்தில் 4ம் அதிபதி பலவீனமாக இருந்து  பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல வீடு அமையாது
  • 4-க்கு அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால் அவருடைய பிறந்த ஊரில் உள்ள சொத்தில் பிரச்சினை ஏற்படும்
  • ஒரு ஜாதகத்தில் நான்கில் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர் தன் சொத்துகளை அனுபவிக்க முடியாது அவருடைய சொத்து அவருக்கு கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள்

சொத்து பிரச்சினைகளை தரும் கிரக அமைப்புகள்

  •  அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து மூன்றாம் வீட்டில் சேர்ந்தால் சகோதரர்கள் சொத்துக்களை அபகரித்துக் கொள்வார்கள்
  • சந்திரன் 11ல் உச்சமாக இருந்து 12ல் செவ்வாய் சனி இருந்தால் ஜாதகன் பேராசை குணத்தால்ஏமாந்து விடுவார்
  •  12-ல் சந்திரன், 4ல் கேது 7ல் செவ்வாய் இருந்தால் பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்
  •  4-ல் சனி 7ல் செவ்வாய் 12ல் ராகு இருந்தால் வரவேண்டிய குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும்
  • 8ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால் தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது
  •  4 க்கு அதிபதி நீசம் அடைந்து 8ல் பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது 8ம் அதிபதியுடன் இருந்தால் அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது
  •  ஒருவருக்கு பூர்வீக சொத்துகளை அனுபவிக்க ஜாதகத்தில் தந்தைக்கு காரணமான சூரியன், பூமி காரணமாக செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் பாதகமான அமைப்பில் இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால் பெரும் போராட்டமும் முடிவில் நற்பலன் ஏற்படும்

Leave a Comment

error: Content is protected !!