அதிசய பனிலிங்கம்
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே அமைந்திருக்கும் அமர்நாத் குகை சிவபெருமானுக்குகாக அற்பணிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 3888மீட்டர் உயரத்தில் அமயப்பெற்றுள்ள இந்த குகை 5000 ஆண்டுகள் பழயமையானதாக கருதப்படுகிறது.
இங்குள்ள பனிலிங்கம் சந்திரனை போலவே 15 நாளில் பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் ,அடுத்த 15 நாட்களில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்..
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை இங்கு பனிலிங்கம் உருவாவது விசேஷம் .அதுமட்டுமல்லாமல் மே முதல் செப்டெம்பர் வரையிலான காலங்களில் இந்த லிங்கத்தை காண இயலும் ..
இந்த குகை 60 அடி நீளமும் ,15அடி உயரமும் ,30 அடி அகலமும் கொண்டது.இங்கு காணப்படும் பணிகட்டியால் ஆன சிவலிங்கம் இயற்கை ஆக உருவானதாக நம்பப்படுகிறது …