பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
- பரணி 3ம் பாதம் துலாம் நவாம்சம் .எனவே இவன் புகர்(சுக்கிரன் ) காலினன் என்று சொல்லப்பட்டது .
- இவனுக்கு மார்பு அகன்று உயர்ந்திருக்கும்,
- வகை வகையான உணவை விரும்புவான் ,
- அறிவுடன் திறனான கல்வி கற்பான் ,
- பலருடைய ஆதரவையும் இவன் பெற்று இருப்பான்
- சிவந்த கண்ணையுடையவன் ,
- அன்னை, தாய் மேல் அதிக பாசம் வைப்பான்,
பரணி நட்சத்திரம் 3ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி 3ம் பாதத்தில் சூரியன் நின்றால்:
- அதிக பணம் இருக்கலாம் ஆனால் பணத்தோடு சொத்துக்களையும் இழப்பான்
- தலையில் அடிபடும்,
- வக்கீல், மருத்துவர் அல்லது நீதிபதியாக பணி புரியலாம் ஆனால் எந்தத் துறையிலும் முழு வெற்றி கிடைக்காது
- செவ்வாய் இந்த பாதத்தை பார்த்தால் கட்டடத் தொழில் மூலம் வருமானம் உண்டு
- மிகவும் முரடன் ,கோபி, அவசர புத்திக்காரன், சண்டைக்காரன்.
பரணி 3ம் பாதத்தில் சந்திரன் நின்றால்:
- இவனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம்
- பிறரால் உயர்வாக மதிக்கப்படுவான்
- இவனை பலரும் விரும்புவர்
- இவன் ஏழைகளுக்கு உதவுபவன் ,
- பட்டு ,பஞ்சு உரத்தொழில்,ஓட்டல் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாத்தியம் உண்டு
பரணி 3ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்:
- இது அசுப பலனை தருவதாகும்,
- 50 வயதுவரை கஷ்டப்பட வேண்டி வரும் அதுவரை பிறரிடம் கையேந்தி கூட பிழைக்க வேண்டி வரலாம்.
- இதன் பின் மிகவும் நல்லகாலம் 84 வயது வரை மிகவும் சுகமாக வாழ்வான்
- சினிமா கொட்டகை, படப்பிடிப்புகூடம் போன்ற வகையில் இந்த காலத்தில் சம்பாதிப்பான்
பரணி 3ம் பாதத்தில் புதன் நின்றால்:
- அதிக ஆயுள் வாழ்வான் ,
- மிகவும் புத்திக் கூர்மையுள்ளவன்
- இவன் மனைவி இவனுக்கு தெய்வம்
- கொடுத்த வரம் போல மிகவும் உத்தமானவளாகவும் ,இவனை பேணி பாதுகாப்பவளாகவும் ,குணவதியாகவும் இருப்பாள்
- பொறியியல் துறை அல்லது கட்டுமான தொழில் மூலமாக சம்பாத்யம் இருக்கும்
பரணி 3ம் பாதத்தில் குரு நின்றால்:
- அதிகமாக பயணம் செய்வான்
- 32 வயதுக்கு மேலும் வாழ்க்கை சந்தோசமாக அமையும்
- சுகபோக ஈடுபாடு அதிகம் உண்டு
- பலவகை விபத்து நேரும் அனால் எப்படியோ தப்பித்த கொள்வான்
- எல்லா தேர்விலும் படித்து வெற்றி பெறுவான்
- சட்டம் ,நகை வியாபாரம் ,விளையாட்டு போட்டி தொழில் முதலியவை மூலம் சம்பாதிப்பான்.
பரணி 3ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:
- பருத்தும், குட்டையானதுமான உருவம் உள்ளவன் ,
- இவன் மனைவி மிகவும் அழகாக இருப்பாள்
- கடைசிவரை தொழில் ,கடமை செய்வான்
- கண்களுக்கு அருகில் அடிபட நேரிடலாம்
- விளம்பரம், செய்தித்துறை முதலியவற்றால் சம்பாதிப்பான்
பரணி 3ம் பாதத்தில் சனி நின்றால்:
- பிறரையே நம்பி வாழவேண்டிய வாழ்க்கை
- பெற்றோர் அல்லாமல் பிறரால் வளர்க்க படுபவன்
- இரண்டு தகப்பன் அல்லது இரண்டு தாய் இருக்கலாம் ,பெற்றவர் வளர்த்தவர்
- இளம் வயதில் பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழக்க கூடும்
பரணி 3ம் பாதத்தில் ராகு நின்றால்:
- புகழ்பெற்ற கவிஞன் அல்லது நூலாசிரியர் ஆவான்
- அடிப்படை படிப்பு அதிகம் இருக்காது ,இருந்தும் கற்ற பெரியோர்கள் மத்தியில் கௌரவமாக பேசி பழகுவான் ,
- காவல் அல்லது பாதுகாப்பு துறையில் பணிபுரிபவனாகவும் இருப்பான்
பரணி 3ம் பாதத்தில் கேது நின்றால்:
- பெரிய யோக்கியவான்
- நோயாளிகளை தன பிராத்தனை சக்தியால் குணப்படுத்தும் பெரியவனவாகவும் இருப்பான்.
- குரு ஆயில்யத்தில் இருந்தால் இவன் தன்னை கடவுளின் அவதாரமாக எண்ணிக்கொள்வான் அப்படியே பிரபலபடுத்துவான்
- மூலிகை ஏற்றுமதி ,கிழங்குகள் வாணிபம் முதலியவற்றால் சம்பாதிப்பான்
காலச்சக்ர தசா :
துலாம் சுக்கிர தசை | 16 வருடம் |
விருச்சிக செவ்வாய் தசை | 7 வருடம் |
தனுசு குரு தசை | 10 வருடம் |
மகர சனி தசை | 4 வருடம் |
கும்ப சனி தசை | 4 வருடம் |
மீன குரு தசை | 10 வருடம் |
விருச்சிக செவ்வாய் தசை | 07 வருடம் |
துலாம் சுக்கிர தசை | 16 வருடம் |
கன்னி புதன் தசை | 9 வருடம் |
பரம ஆயுள் | 83வருடம் |