Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ புத்தாண்டு பலன்கள்-மகர ராசி

பிலவ புத்தாண்டு பலன்கள்-மகர ராசி

பிலவ புத்தாண்டு பலன்கள்-மகர ராசி

மனசாட்சிக்கு மதிப்பளித்து, எப்போதும் எல்லோருக்கும் உதவும் மகரராசி(Pilava varuda palangal Magaram) அன்பர்களே!!!!
உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்
  • உங்களின் ராசிக்கு 4-ஆம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் நன்மை உண்டாகும்
  • கட்டுக்கடங்காமல் இருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்
  •   விவாதங்களைத் தவிர்க்கவும்
  • பல வழிகளில் பணம் வந்து உங்களை உற்சாகப்படுத்தும், செலவுகளும் துரத்தும்
  • திடீர் பயணங்களால் வீண் செலவுகள் வந்துபோகும்
  • பையனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்
  • பெண்ணுக்கு தடைபட்டிருந்த கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும்
  • சித்திரை, ஆனி ,ஆவணி மாதங்களில் சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள்
  • உடன்பிறந்தோரால்  அலைச்சல் செலவுகள் வந்துபோகும்
  • ஆடிமாதம் எதிலும் கவனம் தேவை
  • குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்
  •  விரயச் செலவுகள் வந்துபோகும்
  • சிறு விபத்துகள் வரக்கூடும் வாகனத்தை கவனமாக இயக்கவும்
  • புரட்டாசி மாதத்தில் இருந்து மகிழ்ச்சி தங்கும்
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
  •  வழக்குகளில் நிதானம் தேவை
  • மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்
  • வாயு தொந்தரவு, தலைசுற்றல், வந்துபோகும்
  •  கீரையை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்
  • அக்கம்பக்கத்தார் உடன் அளவாக பழகுங்கள்
  • குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
பிலவ புத்தாண்டு பலன்கள்-மகர ராசி

செல்ல வேண்டிய ஆலயம் 

ஸ்ரீ பிரத்யங்கரா தேவி ,ஸ்ரீ சபர மூர்த்தியின்  இறக்கைகளில் ஒன்றாக திகழ்பவள். இந்த தேவியின் அருளால் சத்துருக்களின் தொல்லைகள் நீங்கும்.
 மகர ராசி (Pilava varuda palangal Magaram) அன்பர்கள் இந்த தேவியை வழிபட்டு பலன் பெறலாம்
பூமி, ஜலம், அக்னி ,காற்று, பிரபஞ்சம், அமிர்தம், சூரியன், மோட்சம், பாவ புண்ணியங்களை ஆளுமை செய்யும் வல்லமை ஆகியன நவ சக்திகளையும்  கொண்ட இந்த அன்னையை ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டு அருள் பெறலாம்
 இயன்றால்  சென்னை சோழிங்கநல்லூரில் அருளும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டு வாருங்கள் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!